நேரம் : 19:00 12-12-2066
▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼
இது ஏதோ தெய்வ ரகசியம் போலிருக்கிறது.
இந்த முடிச்சுகளை நான் தான் அவிழ்த்தாக வேண்டும்.
சிவா என்ன செய்துக் கொண்டிருப்பான் இந்நேரம்.!?
இருக்கும் ஆயிரம் சிந்தனையில் இதுவும் ஒன்று!
பார்த்திபா ... பார்த்திபா .....
என் பெயர் இங்கு யாருக்கு தெரியும்!
அவசரமாய் திரும்பினேன்...
திரும்பாத....
நான் சொல்லுறதுக்கு ம்ம்ம் மட்டும் சொல்லு...
We are under surveillance ...
ம்ம்ம்...
நீ இங்க ரொம்ப பெரிய பிரச்சனைல மாட்டிட்டு இருக்க...
சிவாவ ஹெல்ப் கேளு...
இங்க இருக்கற நிலமைய புரிய வை....
நான் எங்கிருந்து வந்தேன்னு...சிவா பத்தியெல்லாம் உங்களுக்கு எப்படி???
உன்ன பத்தி எனக்கு எல்லாம் தெரியும்...
நீ இங்கிருந்து முதல்ல போ... ஆனா முழுசா இங்கிருந்து உன்னால தப்பிக்க முடியாது...
இந்த சேம்பரோட கேஜ் பெல்ட்ஸயும் சவைலன்ஸ் யூனிட்டயும் என்னால 4செகன்டுக்கு நிருத்தி வைக்க முடியும்...
அதே நேரத்துல....
ஆப்போசிட்ல இருக்கற லிஃப்ட பாரு...
அது திறக்கும்...
அதுக்குள்ள நீ இங்கிருந்து அங்க போயிடு...
அதுக்குள்ள மட்டும் தான் எந்த கண்காணிப்பும் கிடையாது.
ரோப்லயிருந்து கீழ இறங்கினனா லிஃப்ட மைனஸ் 5வது ஃப்ளோர்ல நிருத்திருப்பேன்... அங்கிருந்து உன்னால மைனஸ் 4வது ஃப்ளோருக்கு ஈசியா போயிட முடியும்...
அங்க ஒரு வாம் வாய்ஸ் போர்டல் இருக்கு...
அங்கிருந்து சிவாவ கான்டக்ட் பண்ணு...
அவனால மட்டும் தான் உன்ன காப்பாத்த முடியும்...
And அடுத்த 18நிமிஷத்துல அதே லிப்ட் திரும்ப ஓப்பனாகும்....
அந்த டைம்ல நீ இங்க திரும்பி வந்தாகனும்..
நடுவுல யார்கிட்டயாவது மாட்டினனா உன்ன அவங்க கொல்லாம விட மாட்டாங்க ...
ஆனா இதெல்லாம் நீங்க ஏன்?? யார் நீங்க?
அதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல...
10மணிக்கு ஒரு சைரன் அடிக்கும்... அதை கவனி... அதான் உனக்கான அலர்ட்....
சரி இதெல்லாம் எப்டி??? எனக்கு ஒன்னும் புரியல................
திரும்பினேன்... ஆள் இல்லை...
நடப்பதெல்லாம் தற்செயலல்ல.
நான் எங்கேயோ கட்டாயப்படுத்தி என் முழு சம்மதத்தோடு உந்தித் தள்ளப்படுகிறேன்.
உடனிருந்தவர்களை கவனிக்க,
அறையில் மூவரும் முறைத்திருந்தனர்.
அதிலொருவர்,
உன் பேரு பார்த்திபனா?
(தயங்கியபடி) ஆமா.....
அதோ போனேரே அந்த ஆளு.....
அவர உங்களுக்கு தெரியுமா? யாரு அவரு? அவருக்கெப்படி என்ன?
அந்த ஆளு யாருகிட்டயும் பேசி நாங்க பாத்ததில்ல... அவருனு இல்ல... இங்க எந்த செக்யூரிட்டியும் யாரு கிட்டயும் பேச மாட்டாங்க!
கூடாது...
ஆனா அந்த ஆளு உனக்கு தப்பிக்க உதவுறாருனா.................
உன்ன பத்தின நீ தப்பிக்க வேண்டிய அவசியம் சம்மந்தமான ஏதோ ரகசியம் அவனுக்கு தெரிஞ்சுருக்கனும்!!
சரி........ அங்க போய் உன் ஃப்ரெண்ட கணெக்ட் பண்ணி என்ன சொல்லுவ?
காப்பாத்து காப்பாத்துனு கத்துவியா?
விழித்தேன்....
நல்லா கேட்டுக்கோ....
நீ இருக்க இந்த இடம்.... ஒரு ஃபேக்டரி...
இவங்க இங்க தயாரிக்கிறது மனுஷங்கள!
க்ளோனிங்கா???
கிட்டதட்ட அதான்...
இந்த இன்டஸ்ட்ரி பேரு Time clones incredibles.
டைம் ட்ராவலோட ஒரு பெரிய ரெவல்யூஷன்.
இவங்க வேலையெல்லாம்
ஹிஸ்ட்ரில கடந்த 100வருஷத்துல
மக்கள் கூட்டம் கூட்டமா அழிஞ்சு போன இன்சிடன்ட்ஸ கணக்கெடுத்து
அந்த இன்சிடன்ட் அழியாத மாதிரி இருக்குற இன்னொரு பேரலல் டைம்லைனுக்கு போய் அழிஞ்ச டைம்லைன மாதிரியே அதை க்ரியேட் பண்ணிட்டு
சாக போறவங்கள இங்க கடத்திட்டு வந்து ஸ்லேவ் கம்யூனிட்டிஸுக்கு பிஸ்னஸ் ப்ராஃபிட்டுக்கு வித்துடுவாங்க...
அந்த கம்யூனிட்டிஸ் அப்பரம் வேற யாருக்கோ....
புரியல....
ம்ம்ம்..... 2020ல ஏதோ ஒரு நாள்ல ஒரு பில்டிங் தீப்பத்தி எரிஞ்சு அதுல 100பேரு செத்துட்டாங்கனு வெச்சுக்கோ...
அதோட பேரலல் டைம்லைன்லயும் அதே நடந்துருக்க அவசியமில்ல...
ஏதோ சில காரணத்தால தீ விபத்து நடக்காம இருந்திருக்கும்...
அந்த டைம்லைன செலக்ட் பண்ணி அங்க போய் அந்த விபத்த செயற்கையா ஏற்படுத்தி ரெண்டு டைம்லைனையும் ஷஃப்ல் பண்ணிட்டு
மனுஷங்கள மட்டும் இங்க கொண்டு வந்துடுவாங்க.
இங்க பாரென அருகிலிருந்தவர் சட்டையை விலக்கி மார்பை காட்டினார்.
இடது பக்கம் வட்ட வடிவ ஒரு சிப் பொருத்தப்பட்டிருந்தது.
இது க்ளோன் கண்ட்ரோல் சிப்.
இதை ஃபிக்ஸ் பண்ணி 300கிலோமீட்டர் ரேடியஸ்ல நீ எங்கயிருந்தாலும் உன்னை EM signals வெச்சு செயலிழக்க வைக்க முடியும்.
உன் ஷோல்டர்ல ஒரு நம்பர் சீரியஸ் கோடு இருக்கு பாரு அதான் உன்னோட அடையாளம்.
உனக்கு சிப் பொருத்தப்படலனாவே நீ இங்கிருந்து தப்பிக்க உனக்கு இன்னும் நிறைய வாய்ப்பு இருக்குனு தான் அர்த்தம்.
ஓஓஓஓ மை காட்........
இது என்ன சீக்ரட் ஏஜன்ஸியா??
போலீசுக்கு தெரியுமா?
சட்டம்??
மக்கள் இதுக்கு எதிரிப்பு தெரிவிக்கலயா?
இதெல்லாம் பப்ளிக்கா தான் நடக்குது... இந்தியன் ஆர்மிக்கே கூட இவங்க ஆள் சப்ளை பண்றாங்க!
வெளிய போய் பாத்தா மக்களே பிரிஞ்சு கிடக்காங்க!
இந்த க்ளோன்ஸ பணம் கொடுத்து வாங்குறளவு செல்வாக்கு இருக்குற
பணபலம் ஆள் பலம் படைச்ச அதிகார மக்கள் கூட்டம் ஒரு பக்கம்.
காலணி மக்கள் ஒரு பக்கம்.
ஒரு டைம்லைன்ல உயிரோட இருக்குறவனோட க்ளோன்
ஒன்னுக்கு மேல இருக்க முடியாது.
அதுவுமில்லாம
இவங்க மெஷின்ஸ்ல 100வருஷம் மட்டும் தான் கடக்க முடியும்.. பின்னோக்கி மட்டும்... அதுவும் இதே எக்ஸாக்ட் டைம்லைனுக்கு பயணிக்க முடியாது.
இந்த ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்லாம் மட்டும் இல்லனா இந்த டைம்லைனும் எப்போவோ அழிஞ்சுருக்கும்...
அழிச்சுருப்பானுக.....
(வரலாற்றில் இறந்து விட்டவர்களால் அதே டைம்லைனில் லைஃப் டைம் ரிங் பிரச்சனை இருக்காது என்பதாலே இவர்கள் அழியவிருக்கும் டைம்லைனை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை நன்கறிவேன்)
இவ்வளவு டீட்டெய்ல்டா பேசுரிங்க.......... இதெல்லாம் உங்களுக்கு எப்படி???
இப்போ சொன்னனே சில ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்.... அதை ப்ரேக் பண்ற ரீஸேர்ச் க்ரூல நான் சீனியர் சைன்ட்டிஸ்ட்...
இன்சிடன்ட்க்கு முன்னாடி ஒரு மணிநேரத்துக்குள்ள தான் இந்த கடத்தல பண்ண முடியும்.
அதாவது உண்மையான டைம்லைன்ல செத்துட்டு,
பேரலல் டைம்லைன்ல சாகப் போற இன்ஸிடன்ட்டுக்கு ஒரு மணிநேரம் முன்ன (மட்டும் தான்) சம்மந்தப்பட்டவர இங்க கடத்திட்டு வரலாம்...
ஆனா நான் அந்த லிங்க்க ப்ரேக் பண்ணி ஒரு மணிநேரம் இருபது நிமிஷம் இருபது நொடிகளா ஒரு போர்ட்டல் செயின உருவாக்கினேன்...
அப்பரம் அதை நானே வேண்டாம்னு அழிச்சுட்டேன்...
அதான் இப்போ இங்க இருக்கேன்!!
இதுக்கெல்லாம் என்ன தான் முடிவு???
நீ தான்.... அது நீ தான் பார்த்திபா.... இன்னிலருந்து விதி திருத்தி எழுதப்பட போகுது!
அந்த செக்யூரிட்டி சொன்ன சைரன் அலறியது...
ஆயத்தமானேன்.
பயப்படாம போ....
மத்த இடத்துலயெல்லாம் Recording cameras, Nano gps alerts, Miniature surveillance, Night vission cameras, AI security robots, Air Vibration alerts, Laser & codes recognitionsனு ஏகப்பட்டது இருக்கு... அவங்களுக்கு தெரியாம ஒரு எரும்பு கூட ஊர முடியாது...
லிஃப்ட்ல போறது நல்ல ஐடியா தான்...
ஆனா
பத்திரமா திரும்பி வந்துடு...
இந்த கேஜ் பெல்ட்ஸ் லேசர் டெக்னாலஜி மாதிரி ஏதோ ஒன்றால் உருவாக்கப் பட்டிருக்கிறது.
தொட்டாலே பொசுக்கிவிடும்
போலிருக்கிறது.
கண்கள் இமைக்காமல் பெல்ட்ஸை நோக்கிக் கொண்டிருக்க.......
அறை கதவு கம்பிகள் ஒரு நொடி சடாரென அமிழ்ந்தது.
எனக்கிருப்பதோ மிக க்க்க்க்க்க்குறுகிய கால அவகாசம்.
வேகமாய் பாய்ந்து பெல்ட்ஸை கடக்க
லிஃப்டிற்கும் எனக்கும் ஆறேழடி தூரம். லிஃப்ட் கதவு திறந்தது.
ஓடி லிஃப்ட்க்குள் தாவி ரோப்பை பிடித்தேன்.
கேஜ் பெல்ட்ஸ் திரும்ப அறையை அடைக்க
லிஃப்டும் மூடியது.
இந்த அவகாசத்தில் நான் சவைலன்ஸ் சிஸ்டத்தில் சிக்கியிருக்க மாட்டேனென நம்புகிறேன்.
இவையெல்லாம் ஒரு நான்கைந்து நொடிகளில் நடந்து முடிந்திருக்கக் கூடும்.
ரோப்பிலிருந்து கைத்தேய இறங்கி வர
அது மைனஸ் நான்காவது ஃப்ளோர்.
ஃப்ளோர் ரிஜிட் சென்சாரை உடைத்து
டெலிவர் பேனலை தட்டியதும் கதவு திறந்து விட்டது.
உள்ளே நுழைய எதுவுமில்லா ஒரு காலி அறை.
உண்மையில் எதுவுமேயில்லா........
அறை முழுக்க பளீர் வெண்விளக்குள்.
இது ஏதோ நான் தகவல் அனுப்புவதற்காக எனக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட
அல்லது என்னை திட்டுமிட்டு இங்கு வரவைழைக்கவே வடிவமைக்கப்பட்ட அறை என்பது போன்று காட்சியளித்தது.
முகமறியா யாரோ ஒருவன் பேச்சை கேட்டு சிக்கிக் கொண்டோமோவென கூட தோண்றியது.
இருப்பினும் வேறு வழியில்லை.
சும்மாயிருப்பதற்கு என் பெயர் வரை தானே தெரிந்த ஒருவன் சொல்கேட்டு,
இதை நான் முயற்சித்ததில் தவறேதுமில்லை தான்!
மூலையில் ஒரு மெகா சைஸ் கேட்ஜட்.
அது தான் அந்த செக்யூரிட்டி சொன்ன வாம் போர்ட்டல்.
பழக்கமான ஒரு ஆப்ரைட்டிங் மாடல்.
ஆனால் மிக அட்வான்ஸ்ட்.
இதை எனக்கு ஓரளவுக்கு உபயோகிக்க தெரியும்.
இங்கிருந்து சிவாவிற்கு செய்தி அனுப்ப
அவனிடமிருக்கும் சோல் புல்லரை கனெக்ட் செய்தல் போதுமானது.
கோஆர்டினேட்ஸ் ஏதுமின்றி காலத்தை கடந்து
என் ஃப்ரீக்வன்ஸி நோட்டையே நான் அனுப்பி விட முடியும்.
*Time clones inc.
Searching your exact timeline.
Feed your soul puller identity.*
PS 11010110
*Voice portal connecting...
Please Upload your message*
சிவா... நீ பேசுறது எனக்கு கேக்காது.... நான் சொல்றத தெளிவா கேட்டுக்கோ... இங்க நான் நல்லா மாட்டிக்கிட்டேன்... என்ன அரெஸ்ட் பண்ணி வெச்சுருக்காங்க...
நாம கண்டுபிடிச்சுருக்குற டெக்னாலஜிய இங்க எல்லாம் பப்ளிக்கா தப்பா பயண்படுத்திட்டு இருக்காங்க.... உன் வீடு.... அது இருந்த இடத்துல இங்க 2066ல பெரிய இன்டஸ்ட்ரியே இயங்கிட்டு இருக்கு....
இவங்க க்ளோனிங் பண்ணிட்டு இருக்காங்க... திரும்ப என்னால உன்ன எப்போ தொடர்பு கொள்ள முடியும்னு தெரியல.... என்ன காப்பாத்து... எப்படியாவது.............
*Time Clones incredibles. Voice portal closed..*
குறித்த நேரத்தில் போர்ட்டல் தானாகவே துண்டிக்கப்பட்டது.
அருகிலிருந்த கடிகாரத்தை கவனித்தேன்.
நேரம் 22:20.
செய்தியை அனுப்பியாகிவிட்டது.
இது சிவாவை அடைந்துவிட்டால் இந்த துணுக்குகளை வைத்துக் கொண்டு நிச்சயம் என்னை வேறேதும் வழியில்
என்னை மீட்க முயற்சியெடுப்பான்.
வந்து ரொம்ப நேரமானது போல தோண்றுகிறது.
18நிமிடத்திற்குள் நான் திரும்பி போய் 23rd floorல் லிஃப்ட்டிற்குள் காத்திருக்க வேண்டும்.
இல்லையேல் எல்லாம் குழம்பிவிடும்.
ஓடிப்போய் லிஃப்டிலிருந்து ரோப்பை பிடித்து மேலே ஏற முயற்சித்தேன்.
இறங்குவதை விட ஏறுவது மிகக் கடினமாக தான் இருக்கிறது.
இருந்தாலும் நேரத்திற்குள் போயாக வேண்டும்.
தவ்வித் தாவி
ஏறிக்கொண்டிருக்கயில் கீழிருந்த லிஃப்ட் வேகமாய் மேலே எழும்பியது.
இது ப்ளான்லயே இல்லையே!
தாவி லிஃப்டின் மேல் அமர்ந்தேன்.
தீபாவளி ராக்கெட்டாய் மேலெழும்பிய குட்டியறை 25வது ஃப்ளோரில் போய் நின்றது.
இதற்கு முன் இதுமாதிரியான சர்க்கஸ் சாகசங்களையெல்லாம் நான் செய்ததேயில்லை.
யார் செய்தும் கண்டதுமில்லை.
இப்போது நான் 23வது தளத்திற்கு நேரடியாக போக முடியாது.
லிஃப்ட் கீழறங்கும் வரை காத்திருக்கவும் முடியாது!
வேறு வழியில்லை.
நேரமுமில்லை.
படிக்கட்டுகள் வழியாக தான் போயாக வேண்டும்.
லிஃப்ட்டை திறந்து வெளியே வந்த அடுத்த நோடி
சைரன்கள் அலர தொடங்கின.
A Non recognized foreign object found on 26th floor.
Signal laser proximity alerts.
A Non recognized foreign object found on 26th floor என்ற கோரஒளி எங்கினும் கோஷமிட்டது.
இது குறிப்பிடுவது என்னை தான்.
எங்கிருந்தோ வந்தனர் ஒரு 40-50பேர்..
ஒவ்வொருவனும் ஒவ்வொரு மல்யுத்த வீரன் கணக்காக.!
கைகளில் ஏதேதோ எலக்ட்ரிகல் சாதனங்கள்.
அவையனைத்தும் நிச்சயம் ஏதோ ஆயதங்களாக தான் இருக்க முடியும்.
எவற்றையும் என்னால் இனம் காண முடியவில்லை.
கணித்திருந்த தருணம் அத்தனை பேரும் சுற்றி வளைக்க
பின் முதுகில் யாரோ ஓங்கியுதுத்த வலியோடு படிக்கட்டில் மயங்கி விழுந்..................
--------------------------------------
எப்டி??? எப்டி போர்டல் ரெகக்னேஷன் கோடு இல்லாம
கண்ட்ரோல் சிப்பும் பொருத்தப்படாம லீனியர் செக்ஷன்ல ஒரு க்ளோன் வர முடியும்?
இவன் யாரு என்னங்கற எந்த விபரமும்
ஈ-வாம் ரிஜிஸ்டர்ல இல்ல..
ஹவிட் பாஸிப்ள்?
இவனுக்கு ஐடின்டிடி கொடுத்தது யாரு?
எல்லா டீட்டெய்லும் இன்னும் 10 நிமிஷத்துல இங்க வரனும்.
மயங்கிய நிலையிலும் கொஞ்சம் சுதாரிப்புடன் படுத்திருக்கிறேன்.
உயர் அதிகாரியோ யாரோ இவன்.
மங்களான பார்வையில் காண, கோட்சூட் அணிந்திப்பவன் போன்றொரு விழித்திரை காட்சி.
தன் ஊழியர்களிடம் என்னை பற்றிய விபரங்களை விசாரித்துக் கொண்டிருக்கிறான்.
சர்... இவனோட போர்ட்டல் ரெகக்னேஷன் கோட ட்ரேஸ் பண்ண முடியல.
ஆனா ஈ-வாம் ரிஜிஸ்டர்ஸ செக் பண்ணதுல ஏஜெண்ட் ஹரிபிரகாஷோட லெபாரட்டரில தான் இவனுக்கு individual identity code கொடுக்கப் பட்டிருக்கு under non domestic executions.
TimeRing possibilitiesஐ செக் பண்ணியாச்சு.
No parallel clones are ported from our lab.
All sets... clean.
ஈவன் பட்.............ஹீஸ்ஸோ டேஞ்சரஸ்.
அப்போ Prison planetல அடைச்சுடலாமே சர்? ரிஸ்க் ஏன்!?
ஹாஹா..... மிஸ்டர் ஜெயராம்.... ஒரு க்ளோனோட மதிப்பு தெரியாம பேசாதீங்க..
Prison planetங்கறது நம்மள எதிர்க்கிறவங்க & கம்பெனில தப்பு பண்ண முயற்சி பண்றவங்கள பனிஷ் பண்ண நாடு கடத்துற இடம்!
ஆனா இவன் அப்படியா???
இந்த இன்டஸ்ட்ரி இருக்கே!
இதோட founder... father of this technologies... அவர நீங்க பாத்துருக்கீங்களா?
இல்ல சர்.
நீங்கயில்ல... நானும் அவர பாத்ததில்ல...
அவரோட பார்வைக்கு இது மாதிரியான எதையும் நான் அனுப்புறதில்ல...
இந்த Time clones incகோட வெற்றி மந்திரம் என்ன தெரியுமா?
Making money...
அதனால தான் வெளிய மக்கள் எப்படி பிரிஞ்சு கிடந்தாலும்
வறுமைல அழிஞ்சாலும் நம்மால மட்டும் இங்க பணத்த மேல மேல சேத்துட்டே இருக்க முடியுது.
ஒரு பக்கம் சூது கூத்து கேளினு எதை பத்தியும் கவலையில்லாம சந்தோஷமா திரியுற ஒரு ஜனம்.
ஒரு பக்கம் சோத்துக்கே சிங்கியடிக்கிற இன்னொரு ஜனம்.
இந்த பிஸ்னஸ்ல நமக்கு போட்டி நாம மட்டும் தான்.
இட்ஸ வன் ஹேன்டு நெட்வர்க்.
நமக்கு தேவை பணம்.
அது மட்டும் தான்.
இப்போ சொல்லுங்க இவன என்ன பண்ணனும்னு???
எவனோ ஒருவன்.
வந்து என் உடல் முழுவதையும் தடவுகிறான்.
உடம்ப டெவலப் பண்ணிருக்கான் சர்.
Narrow waist,
Thinner joints,
Wide clavicles,
Strong arms,
Long and round muscle bellies.
The perfect Mesomorph body.
சின்னதா சில ஆர்கன் மாட்யூல் டெஸ்ட்ஸ் பண்ணனும்.
அப்பரம்
ப்ரீமியம் எண்டெர்டெய்ண்மெண்ட் க்ளப்ஸுக்கு ஏலம் விட்டா நல்ல விலை போவான்.
Good.... Do it....
மயங்கியிருப்பினும் ஒரு பெரும் வலி.
யாரோ மார்பில் ஈட்டியால் குத்தியது போன்று.
விர்ரென வைப்ரேட் ஆனது.
பின்
நெஞ்சிலொரு பெரும் உறுத்தல்.
க்க்காஆஆஆ
---------------------------------------
இடம் : சிவாவின் லெபாரட்டரி
நேரம் : 3:34 02-07-2017
▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼
கடந்துவிட்ட இந்த ஆறு மாதங்களில் என்னென்னவோ நடந்துவிட்டன.
பார்த்திபனின் அப்பா அவனை காணவில்லையென கூறி அழுதார்,
போலீஸ் விசாரணை நடத்தப்பட்டது,
காவல்துறையின் பல கேள்விகளுக்கு பொய்யுரைத்தேன்,
என் லெபாரட்டரி சோதனையிடப்பட்டது,
குற்றம் சாட்டப்பட்டேன்
மற்றும் என்னென்னவோ!
சைன்ஸுக்கும் சென்ஸுக்கும் இடையே மாட்டி தவித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் அவனை மீட்டெடுக்கும் முயற்சியிலிருந்து மட்டும் வெளியே வரவில்லை.
காலங்களின் வெளியில்
வேறேதொரு டைம்லைனுக்கு ஆக்ஸிடன்டலாக வழி தவறியிருக்கிறான்
பார்த்திபன்.
இப்படி நடப்பதற்கான இயற்பியல் சாத்தியங்கள் கடற்கரையோர கூழாங்கல் தான்.
பயணத்தின் போது டைம்லைன் நேரம் இடம் போன்ற எல்லா தகவல்களும் துல்லியமாக ட்ராவல் டேட்டா ஸ்டோரேஜில் சேமிக்கப்படுவது தானியங்கி நடக்கும் செயல்.
ஆனால் இந்த பயணத்தின் குறிப்புகள் அனைத்தும்
எப்படியோ தவறியிருக்கிறது.
அவையிருந்திருந்தால் எப்போதோ அவனை காப்பாற்றியிருக்கலாம்.
அவனனுப்பிய செய்தி
பயணித்த காலவழி குறித்த தகவலும் நேரத்தில் தேய்ந்து அரைகுறையாகவே கிடைத்திருக்கிறது.
எஞ்சி கிட்டிய டேட்டாவை கொண்டு
நானே பல ஈக்வேஷன்களை வகுத்து அதை முழுமைப்பெற செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
பார்த்திபனளித்த குறிப்பின் பேரில்
அவனிருக்கும் எக்ஸாக்ட் டைம்லைனை கண்டறிவதென்பது கடினமான ஒரு காரியம்.
இருப்பினுமெடுக்கும் முயற்சியிது.
பேரலல் டைம்லைனுக்கு போர்டலை விருப்பத்தின்படி செலுத்தும் எக்ஸ்ட்ரா மவுண்ட்டிங்கை சிஸ்டத்தில் இணைக்கவே எனக்கு 2மாதங்களாயின.
உண்மையில் சொல்ல போனால் இரண்டே மாதங்கள்!!
வாய்ஸ் நோட் மற்றும் தகவல் பயணவழி குறிப்புகளின்படி,
பார்த்திபன் இருக்கும் சாத்தியக்கூறுகளுடைய டைம்லைன்களின்
பெர்முடேஷன் சீரியஸில் இதுவரை 330 வெவ்வேறு டைம்லைன்களுக்கும் பயணத்திருக்கிறேன்.
எங்கும் சரியான அவன் கிடைப்பதற்கான வாய்ப்புகலில்லை.
நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடம் பார்த்திபன் மட்டுமல்லாது இவ்வுலுகமே பெரும் ஆபத்தை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதை நன்கறிவேன்.
நோட்பேடில் 330க்கு கீழ் டிக் அடிக்காத டைம்லைன் சீரியல் நோட்கள் இன்னும் 8லட்சத்து 12ஆயிரத்து 670 உள்ளன.
அதிஷ்டமிருந்தால் இந்த முயற்சியிலேயே கூட அவனை கண்டு பிடித்துவிடலாம்.
ப்ராபப்லிட்டி டிபண்ட்ஸ்.
*System automized.
PreDetermined datas installing...
Datas installed.
portal navigation analysing...
Navigation found succesfully.
Confirm your transmitter id...*
----------------------------------------------
இடம் : சென்னை சேப்பாக்கம் உள்விளையாட்டு அரங்கம்
நேரம் : 3:34 02-07-2067
▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼
இந்த நீண்ட காலத்தில் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
ஒரு மிகப்பெரிய பொழுபோக்கு நிருவனத்திற்கு 60லட்சம் கோடி ரூபாய்களுக்கு விற்கப்பட்டேன்.
இந்த தொகையெல்லாம் என் டைம்லைனில் 2ஜி ஊழல் விவகாரத்தின் போது ஆஆஆவென வாய் பிளந்து ஆச்சர்யப் பட்டது.
ஊக்க மருந்துகள் ஊட்டப்பட்டு
80கிலோவிலிருந்து 160கிலோவிற்கு எடை ஏற்றப்பட்டேன்.
சண்டை கற்பிக்கப் பட்டேன்.
இந்த காலகட்டத்தின் ஆயுதங்களை பற்றி அறிந்து கொண்டேன்.
அளவாக பயன்படுத்தவும் கற்பிக்கப்பட்டேன்.
பல கோடி கோடி ரூபாய்களுக்கு இன்ஷ்யூர் செய்யப்பட்டேன்.
எல்லாவற்றிற்கும் மேலாய் சக்தி வாய்ந்த கண்ட்ரோல் சிப்புகளும் பொருத்தப்பட்டேன்.
இன்று நான் முதன்முதலில் போடப் போகும் சண்டையை கண்டு களிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் அரங்கிலும் ஆன்லைன் டிவிக்கள் முன்னிலும் திரண்டிருக்கின்றனர்.
வேறுசிலர் போடும் சண்டை காட்சிகளை பார்த்திருக்கிறேன்.
உள்ளே சண்டையிடும் எங்களை போன்றோருக்கு க்ளேடி க்ளோன்ஸ் என்று பெயர்.
உள்ளே விழும் ஒவ்வொரு குத்துக்கும் வெட்டிற்கும் அடிக்கும் ட்ரில்லியன்களில் பணம் பறக்கும்.
பீறிட்டு வரும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் கீழே விழும் முன் மக்கள் கொண்டாடி ரசிப்பார்கள்.
குதூகளிப்பார்கள்.
பெட்டிங் லாட்டரி முதலீடு என உள்நாட்டு பணவான்களும் பன்னாட்டு நிருவனங்களும் காசுகளை இரைப்பர்.
இந்த செல்வ ஆசாமிகளின் சூதுக்கு நாங்கள் முட்டி விளையாடும் பலியாட்டு மந்தை.
சண்டையின்போது
குறிப்பிட்ட நேரங்களில் மின் கோடரி, ஒற்றை தோட்டா துப்பாக்கி, ஆசிட்ஸ், எலக்ட்ரிக்கல் சுத்தியல், சத்து மாத்திரைகள் என வெவ்வேறு ஆயுதங்கள் இடையிடையே தகுதிபடி இருவருக்கும் அளிக்கப்படும்.
யாரோ ஒருவன் சாவிற்கோ அதன் விளிம்பிற்கோ செல்லும் வரை இச்சண்டை இங்கே நடக்கும்.
காண்போருக்கு களிப்பு.
எனக்கோ
இது எனக்கு வாழ்வா சாவா போராட்டம்.
கையில் மின்னீட்டியை கொடுத்து உள்ளே அனுப்பிவிக்கப்பட்டேன்.
எதிரிருப்பவனோ என்னைவிட பன்படங்கு ஆஜாகுபாகுவான முரடன்.
சக அடிமை க்ளோன்.
சுற்றியிருக்கும் லட்சம் மக்களின் கோஷம் காதுகளை கிழிக்க,
உயிர் வாழ வேண்டுமென்ற அற்ப ஆசையை வெறியாக்கி
ஈட்டியோடு அவன் திசை நோக்கி பாய..........
ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
(தொடரும்)
-ராஜ்குமார் @RajiTalks
super
ReplyDelete