30-04-2017
13:34:55
அடுத்த ரிவ்யூ ரிஜிஸ்டர் நம்பர் 113212114323 செல்வா...
தேங்க் யூ...
இது தான் என்னோட ப்ராஜக்ட்...
இது பேரு Generation virtual photocopy.
இந்த ப்ராஜக்ட்டோட மெயின் அப்ஸ்ட்ராக்ட் என்னனா டபுல் ஸ்ப்லிட் எக்ப்ரிமெண்ட்ட விர்ச்சுவல் ஃபோட்டோகாபி லெவக்கு கொண்டு போறது தான்.
கேன் யூ எலாப்ரேட் யுவர் தீஸிஸ்??
எஸ் மேம்....என்றபடி கையில் சாக்ப்பீஸை எடுத்துக்கொண்டு கரும்பலகை அருகில் சென்றான் செல்வா.
அதாவது ஒரு க்வான்டம் பார்ட்டிக்கல Aவிலிருந்து Bங்கற பாய்ன்ட்டுக்கு அனுப்பும்போது அது நேரடியா போய் Bயை மோதுது. இது எக்ஸ்ப்ரிமென்ட் நம்பர் வன்.
இப்போ A & Bங்கற ரெண்டு பாய்ண்ட்டுகளுக்கு நடுவுல ஒரு தடையை ஏற்படுத்துறோம், அந்த தடைல ஒரு ஓட்டை போடுறோம்.
இப்போ திரும்ப அந்த க்வாண்ட்டம் பார்ட்டிக்கல Aவிலிருந்து Bக்கு அனுப்புறோம்.
அந்த பார்ட்டிக்கல் Aவிலிருந்து கிளம்பி நடுவுல இருக்குற தடைல உள்ள ஓட்டைல புகுந்து Bங்கற பாய்ன்ட்ட போய் மோதுது. இது எக்ஸ்ப்ரிமெண்ட் நம்பர் ட்டூ.
அடுத்து அதே தடைல ரெண்டு ஓட்டை போடுறோம் அப்பரம் அதே க்வான்ட்டம் பார்ட்டிக்கல Aவிலிருந்து Bக்கு அனுப்புறோம்.
இப்போ Aவிலிருந்து புறப்படுற அந்த பார்ட்டிக்கல் தடைய நெருங்கியதும் ரெண்டு பார்ட்டிக்கலா பிரிஞ்சு, ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஓட்டைல புகுந்து வெளிய வந்து, அப்பரம் திரும்ப ஒரே பார்ட்டிக்கலா இணைஞ்சு அப்பரமா போய் Bயை மோதுது.
இது தான் டபுல் ஸ்ப்லிட்.
இதுல நான் என்ன பண்ண போறேன்னா,
அந்த க்வாண்ட்டம பார்ட்டிக்கலுக்கு பதில் ஒரு முழு மேக்ரோ காம்ப்போணண்ட்ட போசான் ஃபூயல் யூஸ் பண்ணி அதிவேகத்துல அனுப்ப போறேன், இப்போ அந்த சிங்கில் க்வாண்ட்டம் பார்டிக்கல போலவே நாம அனுப்புற பேனாவோ பென்ஸிலோ ரெண்டு காம்ப்போனண்ட்டா அதாவது ஒரு பேனா ரெண்டு முழு பேனாவா மாறும்ங்கறது என் தீஸிஸ்.
அந்த டிவைடாகுற க்வாண்ட்டம் பார்ட்டிக்கல்ஸோட இண்டிவ்யூஜுவல் மாஸ் என்னனு தெரியுமா? அதாவது அங்க ரெண்டு பார்ட்டிக்கலா இருக்குறது ரெண்டா உடையுதா இல்ல உருமாறுதா?
மாஸ் ரெண்டுக்கும் ஒன்னுனா நீ சொல்லுறது பாஸிபுல்,
வெவ்வேறனா நீ அனுப்புற மேக்ரோ காம்ப்போனண்ட் தடையை அடைஞ்சதும் சுக்கு நூறா வெடிச்சு சிதறிடும்.
மேம்...அதுக்கு தான் அனுப்பப்போற அந்த காம்ப்போனண்ட்ட சுத்தி ஒரு அல்ட்ராசோனிக் மேக்னட்டிக் ஷீல்ட டெவல்ப பண்ண போறேன்.
அந்த ஷீல்டு காம்ப்போனண்ட்ட உடையாம தடுக்கும்.
தென் ஹவ் இட் டிவைட்??
நீ சொல்லுறது ஃபேன்டசியா இருக்கு செல்வா!
இது பாஸிபிலே கிடையாது.
இத தூக்கிப் போட்டுட்டு ஒழுங்கா வேற ப்ராஜக்ட்டோட வா...
ஆனா மேம்.. ஐ கேன் மேக் இட் பாஸிபில்... எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க ப்ளீஸ்...
சரி... அடுத்த ரிவ்யூ வரைக்கும் டைம்.. அது வரை அப்ஸ்ட்ராக்ட் மார்க்க ஹோல்டுல வெக்கிறேன்.
அடுத்த தடவயும் இப்டி சொதப்புனா ரெண்டு ரிவ்யூக்கும் சேத்து ஜீரோ தான் போடுவேன்.
கல்லூரி பைக் பார்க்கிங்கில் அமர்ந்திருந்தான் செல்வா.
இது அவனது பலநாள் கனவு.
இரவு பகல் ஆராய்ச்சி.
அதை குப்பையை போல் நிராகரித்ததில் பெரும் வருத்தம்.
கொஞ்சம் கோபமும் கூட.
உண்மையில் இந்த ப்ராஜகட்டுக்கு இன்று பெரிய பாராட்டுகள் கிடைக்கும் என்றே எண்ணி வந்தான்.
தலைக்கீழாக நடந்த இதை அவனால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஹாய்டா... பப்பி உன் ப்ராஜக்ட்ட இன்னிக்கு லெஃப்ட்டு ரைட்டு வாங்கிடுச்சாம் கேள்விப்பட்டேன்?? என நக்கலடித்தபடி வந்தாள் அனிதா.
அனிதா செல்வாவின் கல்லூரி நட்பு.
மூன்று வருடங்களாக தான் தெரியும்.
இருவர்களுக்குமிடையேயான இந்த உறவு நட்பா காதலா என முழு கல்லூரிக்கும் மட்டுமல்ல அவர்களுக்குள்ளுமே குழப்பம் தான்.
அத்தனை அந்நியோண்யம்.
ஆனால் ஒரு முறையும் அதை எங்கும் எப்போதும் காதலென பிரகடனப்படுத்தியதாக யாருக்கும் தெரியவில்லை.
அதுக்குள்ள யாருடி உனக்கு நியூஸ் கொடுத்தா??
ஹாஹா.... முழு காலேஜுமே உன்ன பத்தி பேசும்போது எனக்கு தெரிச்சதுல ஆச்சர்யம் இல்லடா ராஜா....
சரி ஃபீல் பண்ணாத.... இப்போ இல்லனாலும் கண்டிப்பா ஒரு நாள் நீ இத ப்ரூஃப் பண்ணி காட்டுவடா எனக்கு நம்பிக்கை இருக்கு...
எனக்கு இந்த ஆறுதல் தேவையில்ல அனி...
ஏன்னா எனக்கே தெரியும்... என்னால இதை செய்ய முடியும்னு...
இப்போ என் பிரச்சனையெல்லாம் அதில்ல...
இந்த ரிசேர்ச்ல இறங்கினதுலருந்து மூனு மாசமா சுத்தமா தூக்கமேயில்ல...
கண்ட கண்ட தேஜாவு ஹலூசினேஷன்லாம் வருது... மனசே ஒரு மாதிரி டிஸ்டப்டா குழப்பமா இருக்கு...
எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வெகேஷன் மாதிரி எதாவது ஒன்னு வேணும்...
முதல்ல நீ ஒரு டாக்டர பாக்குறது நல்லதுனு தோணுதுடா...
அடிப்பாவி என்ன மனநோயாளியாவே ஆக்கிட்டியா??என்றபடி துரத்தினான்...
இருவரும் மூச்சிரைக்க ஓடி வந்து ஒரு மரத்தினடியில் நின்றனர்...
அனி... உனக்கு ஒன்னு சொல்லவா.... அந்த மாங்காவ பாரு என மரத்தின் உச்சியை நோக்கி விரலை நீட்டினான்....
அது இப்போ கீழ விழும் பாக்குறியா?
என்ன மாங்கா மேஜிக்கா?? போடா டேய்....
இல்ல... எனக்கு தோணுச்சு...
அது இப்போ கீழ விழும் பாரு என சொல்லி வாயை மூட எங்கிருந்தோ பறந்து வந்த கல்லொன்று உரச கிளைத்தழை சலசலப்புடன் கீழே விருந்தது....
எட்டிப் பார்த்தாள்...
காம்ப்பவுன்டுக்கு மறுபக்கத்தில் கற்களோடு சில சிறுவர்கள் நின்றுக்கொண்டிருந்தனர்...
டேய்.. அவனுக கல்ல ஓங்குறத பாத்துட்டு என்கிட்ட மேஜிக் பண்ணி ஃபில்ம் காட்டுறியா என சீண்டினாள்.
இவ்வளோ மாங்கால அது மட்டும் விழும்னு எனக்கு எப்டி தெரியும்??
அது கோ-இன்ஸிடண்ட்....
அது கோ-இன்ஸிடண்ட் இல்ல டாமிட்...
ப்ரீ-டிடர்மைண்ட்....
எனக்கு தோணுச்சு அனி என்ன நம்பு.... என அடம் பிடிக்க ஆரம்பித்தான்...
சரி சரி நம்புறேன் உனக்கு ஞானதிருஷ்டி இருக்கு ஒத்துக்கறேன் விடு என கலாய்த்து சமாதானப்படுத்தியவளாய் கைகளை அனைத்து அவனை அங்கிருந்து நகர்த்தினாள்...
செல்வா சொன்னவற்றையெல்லாம் அவள் நம்பாததற்கு ஒரு காரணமும் இருந்தது.
காரணம் அவன் சொன்னவை யாவும் கொஞ்சமும் நம்புவதை போல் இல்லை என்பது தான்.
எப்போதும் கல்லூரி பேருந்தில் தான் வருவாள்...
அன்று கொஞ்சம் தாமதமானதாக தெரிய தன்னை வீட்டில் விட்டுவிடும்படி கேட்டாள்.
அடிக்கடி செல்வாவுடன் பைக்கில் செல்வதற்காகவே திட்டமிட்டு பேருந்தை விடுவது அனிதா செய்யும் வழக்கமான ஒரு காரியம் தான்.
வாரத்தில் குறைந்தது மூன்று முறையேனும்.
இது செல்வாவுக்கும் தெரியும்.
பைக்கில் வருவாள் ஆனால் அமரும் முன் தன் முதுகுப்பையை கழட்டி செல்வா முதுகில் மாட்டிவிட்டுவிடுவாள்.
அத்தனை எச்சரிக்கை உணர்வு.
இதுக்கு உன்ன ஷேராட்டோலயே அனுப்பியிருப்பேன்டியென அவனும் மனதிற்குள் நினைத்துக்கொள்வான்.
பைக் சிக்னலில் நின்றது...
32
31
30
29
28
பக்கத்தில் நின்ற காரின் கண்ணாடி பார்த்து தலையை கோதினாள் அனிதா.
கார் பேருந்து மற்றும் இதர வண்டிகளென மொத்தமும் ஐம்பது வாகணங்கள் நின்றுக்கொண்டிருக்கலாம்.
சிக்னலுக்காக காத்திருந்த பாதசாரிகள் சிலர் அவசரத்தில் சாலையை கடந்தனர்.
கல்லூரி மாணவர்கள் சிலர் எம்டிசிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
இடைஞ்சல்களுக்கு மத்தியில் புகுந்த சிறுமி ஒருத்தி பேனா விற்றுக்கொண்டிருந்தாள்.
பொதுவாக எல்லா சிக்னல்களிலும் சாதாரணமாக நிகழும் வழக்கமான சம்பவங்கள் தான்.
14
13
12
பின்னாடியிலிருந்து ஒரு பைக் மட்டும் சீறிப்பாய்ந்து கூட்டத்திற்குள் புக டமால் எனும் கோர சப்தம்.
தீப்பிழம்புகள் உமிழ்ந்தெழ சிக்னலில் நின்ற பைக்குகள் காற்றில் பறந்தன.
எங்கும் ஓலம்.
கதறியபடி கருகியப்படி பலரும் அங்குமிங்கும் ஓடினர்.
அனிதாவை தேடினான், ஆடைகள் ஆங்காங்கே பொசுங்கி ஓரமாய் கிடந்தாள்.
சின்ன அடி தான்... சுயநினைவு இருந்தது...
எங்கும் புகைமூட்டம்...
அலறிபடி நான்கைந்து தீயணைப்பு வண்டிகள் சொல்லி வைத்தாற்போல் உடனடியாக எங்கிருந்தோ விரைந்தன...
இவையனைத்தும் ஒன்று அல்லது அதற்கும் குறைவான நிமிடங்களில் நடந்து முடிந்திருக்க வேண்டும்.
பைக் சிக்னலில் நின்றது...
32
31
30
29
28
பக்கத்தில் நின்ற காரின் கண்ணாடி பார்த்து தலையை கோதினாள் அனிதா.
சிக்னலுக்காக காத்திருந்த பாதசாரிகள் சிலர் அவசரத்தில் சாலையை கடந்தனர்.
கல்லூரி மாணவர்கள் சிலர் எம்டிசிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
இடைஞ்சல்களுக்கு மத்தியில் புகுந்த சிறுமி ஒருத்தி பேனா விற்றுக்கொண்டிருந்தாள்.
திரும்பி பார்த்தான்.
சற்றுமுன் பைக்கை ஓட்டி சென்று விபத்துக்குள்ளாக்கி வெடிக்க செய்த அதே ஆள்.
சிவப்பு நிற சட்டை, அதே ராயல் என்ஃபீல்டு வண்டி...
வேகமாக பைக்கிலிருந்து இறங்கி அவனருகில் போக முற்ப்பட்டான் செல்வா.
சிக்னல் விழப்போகுது செல்வா எங்க போறயென அழைத்தபடி அனிதாவும் பின்னாலேயே ஓடி வந்தாள்.
21
20
19
ஏய்... கீழ இறங்கு உன்ன செக் பண்ணனும் என்றான்.
ஏதோ ஓர் சாலையில் யாரோ அறிமுகமில்லா ஒருவனை போய் போலீசல்லாத ஒருவன் உன்னை சோதனையிட வேண்டுமென அழைக்க, சாதாரமானவனுக்கு வரும் இயல்பான கோபம் வந்தவனாய தான் அவனும் நடந்துக்கொண்டான்.
நீ யாருயா என்ன சோதன போட??
நடுரோட்டுல பைத்தியக்காரத்தனம் பண்ணாம ஓரமா போ...
அவசரப்பட்டவனாய்
உன் ஜர்க்கினுக்குள்ள என்ன வெச்சுருக்க என்றபடி இன்னும் நெருங்க,
செல்வா எல்லாரும் பாக்குறாங்க உன் விளையாட்டெல்லாம் வேணாம் வா என அழைக்கிறாள் அனிதா.
அனி இவன் ஒரு ஹ்யூமன்பாம் ஒரு நிமிஷம் இரு... நான் சொல்லுறத கேளு... ஏய் கீழ இறங்குடாவென சட்டையை பிடித்து இழுக்க,
5
4
3
2
1
யோவ் ஓரமா போய் சண்ட போடுங்கயாவென பின் நிற்பவர்களின் கூச்சல் ஹாரன் அதட்டல்..
இருவருக்குள்ளும் கைக்கலப்பு...
சிலர் விலக்கி விடவும் முயற்சித்தனர்.
சிக்னல் விழுந்து ட்ராஃபிக் ஜாம்...
கீங் கீங் கீங் பெருஞ்சத்தம்.
ஏதோ முக்கியமான ஒன்றை தேடியவனாய் பாக்கெட்டுக்குள் கைவிட்ட என்ஃபில்டு ஆசாமி, பாமின் ட்ரிகரை தான் எடுக்க முயற்சிப்பதாய் அனுமானித்து கைகளை முதுகில் மடக்கி பிடித்தான்...
இவன் சட்டையை செக் பண்ணுங்கவென வேடிக்கை பார்த்தோர் சிலரை அழைக்க யாரும் முன் வரவில்லை.
வழக்கமாய் எல்லாம் முடிந்து கடைசியாய் வரும் போலீஸ் அன்று கொஞ்சம் முன்னதாகவே வந்து விட்டது...
இருவரையும் விலக்கிவிட்டு சோதனையிட
செல்வா சொன்னதை போலவே
அவன் உடல் முழுவதும் உயர் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள்.
இதனை கண்டுபிடித்து இத்தனை உயிர்களை காப்பாற்றியதற்காக செல்வாவிற்கு மெடலெல்லாம் வழங்கிவிடவில்லை.
மாறாக அவர்களின் சந்தேகம் செல்வா மீதுமிருந்தது.
விசாரித்ததில் அவன் தன் பெயர் சித்திக் முசாப் அல் பஞ்சாபி எனவும் தான் ஒரு அல்காயிதா தற்கொலை படையெனவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான்.
விசாரணை மொத்தமும் ஓய்ந்து கமிஷ்னர் அலுவலகத்திலிருத்து வெளியே வர இரவு பதினொன்று ஆகிவிட்டது..
என்னால இதை நம்பவே முடியல செல்வா...
எப்டி அவன் பாம் வெச்சுருந்த்து உனக்கு தெரியும்?
உனக்கு தோணுச்சா?
இல்ல அனி... எனக்கு தோணல... நான் அதை பாத்தேன்... இந்த தடவ அந்த சத்தத்தையும் வலியையும் நான் ஃபீல் பண்ணேன்...
வேற என்ன பாத்த?? அதுக்கு முன்ன அவன் யாருகிட்டலாம் பேசினான்?? இப்டி எதாவது??
இல்ல.. அதெல்லாம் இல்ல..
நீ வேணும்னா எங்க ஆண்ட்டி ஒருத்தங்க இருக்காங்க ஆஷா விஜய்குமார்னு.
அவங்கள மீட் பண்ணுறியா நாளைக்கு?? அவங்களோட க்ளீனிக்ல??
அவங்க ஒரு ஃபிஸிஷியேட் அப்பரம் சைக்கார்ட்டிஸ்ட்...
சும்மா பேசிப்பாரு உனக்கும் ஒரு கவுன்ஸ்லிங் இப்போ தேவைனு நினைக்கிறேன்...
அனிதாவின் வற்புருத்தலின் பேரில் வருவதாகவும் ஒப்புக்கொண்டான் செல்வா.
க்ளீனிக்கிற்கு இருவரும் சேர்ந்து தான் சென்றனர்.
தொட்ட எடுப்பிலேயே ஹிப்னடைஸ் செய்து பார்ப்பது எங்கும் வழக்கமல்ல..
அது உயிருக்கே ஆபத்தானதும் கூட....
இருப்பினும் அதற்கான எந்த அவசியமுமின்றியும் மூன்று மணிநேரம் இந்த ஹிப்னடைஸ் ட்ரீட்மெண்ட் போனது.
கூடவே சில இசிஜிகளும் ஸ்கேன்களும்.
பின் அந்த மாலை வேலையே இருவரிடமும் பேசுவதற்காக அழைத்தார் அந்த டாக்டர் பெண்மணி.
உள்ளே சென்றதுமேவே செல்வாவை வெல்கம் சூப்பர்மேன் என்றபடி வரவேற்றார் ஆஷா.
அமர்ந்த மட்டிலேயே ரிப்போட்ல என்ன இருக்கு டாக்டரென தொடங்கிறான் செல்வா.
ஹ்ம்... உங்களோட இந்த நடத்தைய தான் சூப்பர்பவர்னு சொல்லுறதா இல்ல சைன்ஸ்படி எக்ஸ்ப்ளைன் பண்ணவானு யோசிக்கிறேன் என்றார் ஆஷா.
இது என்ன இஎஸ்பி பவர் மாதிரியா ஆண்ட்டி??
இது இஎஸ்பி தேஜாவுலாம் இல்ல அனிதா...
இவருக்கு எதிர்காலத்தை பாக்குற ஒரு சக்தி கிடைச்சுருக்கு...
ஹிப்னடைஸ் பண்ணி பாத்தேன்... நிறைய விஷயம் பேசுனேன்.. அப்பரம் இந்த ரிப்போட்ஸ்... இதெல்லாம் பாக்குறப்போ என் கணிப்பு என்னனா..........இவரோட மூளை அடுத்த டைமண்ஷன ப்ரேக் பண்ணுற ஒரு கெபாஸிட்டிய அடைஞ்சுருக்கு.
புரியல டாக்டர்... இது வியாதியா?
இதை குணப்படுத்திடலாமா?
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க...
நம்மள சுத்தி நிறைய டைமன்ஷன்ஸ் இருக்கு செல்வா ...
ஆனா நம்ம மூளை மூனே மூனு டைமன்ஷன அடாப்ட் பண்ண தான் எவால்வ் ஆகிருக்கு.. ஆனா நேச்சர் சில பேர சூப்பர்ஹ்யூமன்ஸா படைச்சிருக்கு... அவங்கள்ல சிலரோட மூளை அடுத்த டைமன்ஷன ப்ரேக் பண்ணுற சக்திய எதேர்ச்சையா அடைஞ்சுடுது...
உங்களோட இந்த சக்திய வாட்ச் டவர்னு சொல்லுவாங்க...
வாட்ச் டவர்னா??
ஓகே அனிதா... உங்க வீட்டு மாடிலருந்து பாத்தா உனக்கு என்ன தெரியும்?
எங்க வீட்டு வாசல்... அப்பரம் அந்த தெரு....
அதுவே ஒரு 50மாடி பில்டிங்லருந்து கீழ பார்த்தா?
அந்த ஊரே தெரியும்...
எக்ஸாக்ட்லி... இப்போ காலம்ங்கற டைம்ன்ஷன்ல முன்னயும் பின்னயும் பாக்குறது போல ஒரு உயரமான இடத்த கண்டுபிடிச்சுட்டு அது மேல நின்னு கீழ பாத்தா??
நம்ம எதிர்காலம் நிகழ்காலம் ரெண்டுமே தெரியுமில்லையா!?
அதை தான் செல்வாவோட மூளை செய்யுது...
ஆனா இது எப்டி ஆண்ட்டி பாஸிபுல்??
வை நாட் அனிதா??
நான் சொல்லுற சினாரியோவ யோசிச்சு பாருங்க...
ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரு.. ஒருத்தன் உயரமான ஒரு மரத்து மேல உக்காந்துருக்கான்... இன்னொருத்தன் கீழ நிக்கிறான்.
தூரத்துலருந்து ஒருத்தன் அந்த மரத்த நோக்கி நடந்து வரான்னு வை... மரத்து மேல இருக்கவனால அவன நல்லா பாக்க முடியும்.. ஆனா கீழ நிக்குறவனால பாக்க முடியாது.
அவன் நடந்து வர சம்பவம் ரெண்டு பேரோட நிகழ்காலத்துலயுமே பொதுவா தான் நிகழுறது.... ஆனா உயரத்துல இருக்குறவன் கீழ இருக்குறவன விட முன்னாடியே அந்த சம்பவத்த பாத்துடுறான்.
நடந்து வரவன் மரத்தை நெருங்கினா தான் கீழ இருக்கவனால பாக்க முடியும்.
வாட்ச்டவர்ல செல்வாவோட மூளை இதையே கொஞ்சம் அட்வாண்ஸ்டா செய்யுது அவ்வளவு தான்.
இல்ல டாக்டர்... எனக்கு இந்த பவர்லாம் எதுவும் வேணாம்... எனக்கு மருந்து கொடுங்க ஊசி போடுங்க... எதாவது பண்ணுங்க... இதோட என்னால நிம்மதியா இருக்க முடியல... என்ன சரி பண்ணுங்க....என புலம்ப ஆரம்பித்தான்.
இவர்கள் தன்னை ஒரு ஆராய்ச்சி எலியாக பயன்படுத்துவதை அவன் விரும்பவில்லை.
உண்மையில் இது வரமல்ல.. சாபம்... மிகப்பெரும் சாபம்.. இதிலிருந்து மீண்டு வந்துவிடவே அவன் விரும்பினான்.
நான் 100% ஷ்யூரா சொல்லல செல்வா... இது ஒரு கணிப்பு தான்..
ரிப்போட்ஸ என் சீனியர்ஸுக்கு அனுப்பிருக்கேன்...
அடுத்த வாரத்துக்குள்ள டீட்டெய்ல்டு அனலைஸ் வந்துடும்... அப்பரம் பேசலாம் என அனுப்பி வைத்தார் ஆஷா....
இரவெல்லாம் உறக்கமில்லை.
எது உண்மை எது பொய்யென்ற குழப்பத்திலேயே எப்போதும் ஒருவித எச்சரிக்கை மனப்போக்கோடே செயல்படுவதெல்லாம் சபிக்கப்பட்ட சாத்தான்களுக்கு கிடைத்த வரம்.
காலை விடியும்பொழுது வரை குறைந்தது ஒரு மணிநேரம் உறங்கியிருக்கலாம்.
அல்லது அதுவும் ஒரு கனவாகவுமிருக்கலாம்..
அதற்கு முன் கூட இவ்வளவு மன அழுத்தம் இருந்ததாக தெரியவில்லை.
அந்த டாக்டரின் விஞ்ஞான விளக்கவுரை மனதளவில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
கொஞ்சம் ஆறுதலோ அரவணைப்போ தேவைப்பட்டது.
அனிதாவிற்கு கால் செய்து கேட்டதற்கு ஃபீனிக்ஸ் மாலில் இருப்பதாக சொல்ல உடனே கிளம்பி போனான்.
இருவரும் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
பெரும்பாலும் எல்லாம் சரியாகிடும் செல்வா கவலைப்படாத ரக பேச்சுகள் தான்.
பக்கத்து டேபிள் ஆளொருவன் இருவரையும் அடிக்கடி அரைக்கண்ணில் பார்த்துக்கொண்டிருக்க,
அந்த டேபிள்ல இருக்கவன் நம்மளயே பாத்துட்டுருக்கான் பாரேன்...
அவன் நம்மள பாக்கல என்ன பாக்குறான்...
ஏன்னா நான் அவ்வளோ அழகாருக்கேன்ல என சீண்ட,
அடுத்த முறை அவன் திரும்புகயில், என்ன என்பது போல் செல்வா புருவம் உயர்த்த அந்த ஆள் இடத்தை காலி செய்தான்.
செல்வா அப்நார்மலாக இருப்பதாக தெரியும்போதெல்லாம் இப்படி சில விளையாட்டுகளால் அவனை திசை திருப்புவது அனிதாவிற்கு வழக்கம்.
திடீரென ஃபயர் அலாரம் அலரும் சத்தம்.
அனைவரும் எழுந்து கீழ்த்தளம் நோக்கி விரைய சொல்லும் மால் அதிகாரிகளின் கூச்சல்.
மனசுல நிம்மதியில்லனு இங்க வந்தா இங்கயும் எதாவது பிரச்சனையா!!
இதுபோன்ற நேரங்களில் ஓடுதல் கூனாதென இருவருக்கும் தெரியும்.
எழுந்து அனிதா கைகளை கோர்த்து வேகமாய் நடக்க தொடங்கினான்.
எதிர் வருபவர்கள் பலரும் பயத்தில் அப்படியிப்படியென மோதினர்.
ஒரே சலசலப்பு...
கைகள் நிறைய பைகளுடன் வந்த ஒரு பெண்மணி அனிதாவை உரச பைகள் அத்தனையும் கீழே சிதறின.
நடந்தபடியே சாரிங்க பாத்து போங்கவென எச்சரித்தாள்.
அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லையென மணிக்கட்டை இழுத்தான்.
சாரி சாரி மன்னிச்சுடுங்க பாத்து போங்கவென அக்கரையுடன் மீண்டும் எச்சரித்தாள்.
கூட்டத்தில் நடைத்தடுமாறி ஓட தன்னை தவிர மீதமனைத்தும் மெதுவாய் நகர்வதாய் உணர்ந்தான் செல்வா...
காதுகளுக்குள் குரல்...
அனிதாவுடையது...
இதுக்கு பேரு மெட்டல் 88662 செல்வா.... இதுக்குள்ள...... அந்த யுனிவர்ஸோட பேக்அப் யாரு கைலயும் கிடைக்க கூடாது...... எனக்கு நாளு வருஷ ஜீரோவாய்டு அக்ரிமெண்ட் முடியுது.... என்ன காப்பாத்து என்றவளின் கைகள் முழுக்க ரத்தம்....
தலையில் இன்னும் சில குரல்கள்... பலப்பல காட்சிகள்...
தலையே வெடிப்பது போலொரு உணர்வு...
ஓடிவந்த ஒருவன் தோள்களில் இடிக்க அனிதாவின் கைகளை பிடித்தவாரே இடறிவிழ, விழுந்த இடத்திலேயே மயங்கினான்.
கண் விழித்து பார்க்க செல்வாவின் வீடு...
ஒன்னுமில்லடா.... கூட்டத்துல அங்க நீ பதட்டத்துல மயங்கி விழுந்துட்ட... வேற ஒன்னுமில்ல....
அந்த ஃபயர் அலாரம் கூட ஏதோ டெக்னிக்கல் மிஸ்டேக்னால தானாம்.
எழுந்தவன் கேட்ட முதல் கேள்வி இது தான்.
மெட்டல் 88662னா என்ன?
அனிதாவின் முகம் கொஞ்சம் மாறியதை செல்வாவால் கவணிக்க முடிந்தது.
என்ன கேக்குற புரியல....
அதுக்குள்ள என்ன இருக்கு??
யுனிவர்ஸோட பேக்அப்னா என்ன?
நீ சொல்லுறது கொஞ்சமும் புரியல என்னடா உளர்ர?
ஜீரோவாய்டுனா என்ன? எனக்கு எல்லாம் கேட்டுச்சு....
ஏதோ அக்ரிமென்ட்... அப்டினா என்ன?? சொல்லு எனக்கு தெரியனும்...
அமைதியானாள்.
கைத்தட்டினால்..... சிரித்தாள்....
ஜீரோவாய்டு... இந்த பேர நீ சொல்லனும்னு தான் நாங்க இவ்வளவு நாள் வெய்ட் பண்ணினோம்..
நீங்கனா?? என்ன சொல்லுற?? நீ பிஹேவ் பண்ணுறதெல்லாம் எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல... தெளிவா சொல்லு..... ப்ளீஸ்....
ஜீரோவாய்டுங்கறது ஒரு செக்யூரிட்டி கம்யூனிட்டி செல்வா... நானும் அதுல ஒரு ஏஜென்ட்... நாங்க எம்88662ங்கற ஒரு மெட்டல பாதுகாத்துட்டு இருக்கோம்...
அதுக்குள்ள என்ன இருக்கு?? என அதட்டினான்.
சொல்லுறேன் சொல்லுறேன்....
அதுக்குள்ள என்ன இருக்குனா........ யுனிவர்ஸோட பேக்அப்னு சொன்னாங்க... உண்மைய சொல்லனும்னா அதுக்குள்ள எக்ஸாக்ட்டா என்ன இருக்குனு எங்களுக்கே தெரியாது... எங்களோட வேலை அதை பாதுகாக்குறது அவ்வளவு தான்.
என் அக்ரிமென்ட் 4வருஷத்துக்கு அப்பரமா நாளையோட முடியுது... நாளைலருந்து அடுத்த நாளு வருஷத்துக்கு என்ன போலவே சூப்பர்ஹ்யூமனான வேற ஒருத்தரோட பொறுப்புக்கு இது மாறப்போகுது....
அது வேற யாருமில்ல............. நீதான்...
என் கைக்கா?? என்ன சொல்லுற??? நீ சூப்பர்ஹ்யூமனா??
ஆமா....
எனக்கு இயற்கைலேயே ஒரு பவர் உண்டு... யாரு பேசும்போதும் செயல்படும்போதும் அது உண்மையா பொய்யா எதெது உண்மை பொய்னு என்னால கண்டுபிடிச்சுட முடியும்.
நீ முதல் தடவ மாங்கா கீழ விழும்னு சொன்னப்போவே கண்டுபிடிச்சுட்டேன் நீ உண்மைய தான் சொல்லுறனு....
அப்பரம் ட்ராஃபிக்ல பிஹேவ் பண்ணப்போ 100% க்ளியர் ஆகிடுச்சு...
அந்த பாம் மேன் அவன் அல்காயிதாவும் இல்ல ஐஸிஸும் இல்ல... அவன் என்னை கொல்ல தான் அங்க வந்தான்...
நான் தான் அவன் டார்கெட்....
நான் கூட்டிட்டு போனேனே அவங்களும் என் ஆன்ட்டியோ உண்மையான டாக்டரோ இல்ல...
அவங்க எங்க ஏஜண்சியோட அட்வைசர்..
அவங்க தான் கன்ஃபாம் பண்ணாங்க... ஆனா உன் வாய்லருந்து ஏஜன்ஸி பத்தின விஷயம் வெளிய வர வரை வெய்ட் பண்ணுனோம்... ஏன்னா நாங்க யாரையும் செக்யூரிட்டுயா செலக்ட் பண்ணுறதில்ல... அது தானாவே நிகழும்....
அது பத்தி பேச தான் காலைல மால்ல சீக்ரட் மீட்டிங் அரேஞ்ச் பண்ணினோம்...
ஆனா நீயும் அங்க வருவனு எதிர் பாக்கல...
ஒருத்தன் எதிர் டேபில்ல நம்மலயே பாத்துட்டுருந்தானே அவன் ஸ்ப்பையா இருப்பானோறு ஏஜண்ஸிக்கு சந்தேகம்...
நினைச்சது போலவே அவன் நம்ம எதிராளி தான்...
அதனால தான் மால்ல கலகத்த கூட்டி அங்கிருந்து தப்பிச்சோம்...
ஒருத்தரை இடிச்சுட்டு சாரி பத்திரமா போங்க சொன்னேனே அது கோடு வேடு... அப்டினா மீட்டிங் ஒத்தி வைக்கப்பட்டிருக்குனு அர்த்தம்.
நீ சொல்லுறதெல்லாம்...........என தலையை பிடித்தான்.
நம்பும்படியா இருக்காது தான்...
ஆனா நான் சொன்னது அத்தனையும்.... உண்ம....
இந்த பொறுப்பு உன் கைக்கு வரதுக்கு முன்ன உனக்கும் இது பத்தின எல்லா ட்ரெய்னிங்கும் கொடுப்பாங்க... நாம இப்போ கிளம்பியாகனும்... எனக்கு நாளையோட அக்ரிமெண்ட் முடியுதுனு அவங்களுக்கு தெரியும்... மீட்டிங் டைம்ல உன்ன வேற என் கூட சேத்து பாத்துட்டாங்க... உன்ன தேடி அவங்க வரதுக்குள்ள நாம இப்போ கிளம்பியாகனும் இங்கிருந்து...
அந்த மெட்டல் இப்போ எங்க இருக்கு???
நம்ம எதிராளினு சொன்னியே அவங்க யாரு?? நீங்க யாருக்கு கீழ வேலை செய்யுறிங்க??
எல்லாத்தையும் போற வழில சொல்லுறேன் என அறைக்கதவை திறந்து ஹாலுக்கு வர பளீர் நீல நிற வெளிச்சம்...
ஹாலின் நான்கு புறங்களிலும் இருந்த வெர்ட்டிகல் லைட்டுகள் உடல் சுட்டன...
உள்ளே வரும்போது இவை இங்கே இல்லை.
இவற்றை யாரோ கொண்டு வந்து இங்கே வைத்திருக்க வேண்டும்.
வலியில் செயலிழந்து அனிதா கீழே விழ, விழுமிடத்திலிருத்த கண்ணாடி துண்டுகள் கிழித்து கைகளிலும் கால்களிலும் ரத்தமாய் ஓடின.
ஊர்ந்து வந்த ஒரு குட்டி ரோபோ சிலந்தி காலில் எதையோ இன்ஜக்ட் செய்து சென்றது.
வெளிச்சத்தின் பிடியிலிருத்தவள் மெட்டல் பற்றிய ரகசியங்களை உளர ஆரம்பித்தாள்.
செல்வா ஓடிப்போய் அவளைஅங்கிருத்து நகர்த்த முயற்சிக்க அனிதாவால் இஞ்ச் கூட நகர முடியவில்லை.
விளக்குகளை இயக்கும் ஆப்ரேட்டிங் யூனிட் அங்கிருப்பதை கண்டான்.
அனிதா ஒரு பக்கம் உளறிக்கொண்டிருந்தாள்.
எங்களோட ஹெட்க்கோட்டஸ் ஜீரோவாய்டு போர்ட்டல் செவன்.
அது இருக்குற இடம்...... ஶ்ரீரங்கபாட்னா..... கோஆடினேட்ஸ் 12.414°North 76.704°East.....
வலியால் கத்தினாள்...
யாரோ எங்கிருந்தோ இதை இயக்கிக்கொண்டிருக்கின்றனர் என தோண்றியது.
யூனிட்டை தட்டிப் பார்க்க ஆப்ரேஷன் ஷட் டவுன் என்றிருந்தது.
அதிலிருந்து வரும் வெளிச்சம் தான் அவளை இயக்கிக்கொண்டிருப்பதாகவும்
இதை ஷட் டவுன் செய்து விட்டால் அனிதா மீண்டுவிடுவாளெனவும் நம்பினான்.
இயக்கி பார்க்க பாஸ்வேடு கேட்கிறது.
பாஸ்வேடு என்ன என்ன என்ன கத்த ஆரம்பித்தான்.
அனிதா ஒரு பக்கம்........ அந்த மெட்டல்88662... அது சென்னைல என் பாதுகாப்புல தான் இருக்கு.... லேட்டிட்யூட் 62.8..........வலியில் அதற்கு மேல் பேச முடியவில்லை... இருப்பினும் உந்தப்பட்டு முயற்சித்தாள்.
பாஸ்வேடு என்னவாருக்கும் என்னவாயிருக்கும் என்னவாயிருக்கும் என்னவாயிருக்கும் என்னவாயிருக்கும் என்னவாயிருக்கும்.......... மணி ஒன்று.... சுவர்கடிகாரம் டிங்கென ஒரு மணியடித்தது....
செலுத்தப்பட்டவனாய் டைப் செய்தான்.
00101110111E
ப்ராஸஸ் இன்கம்ப்ளிட்.... சிஸ்டம் டெனிய்டு...
விளக்குகள் அமிழ்ந்தன.
கம்ப்யூட்டர் செயலிழந்தது.
என்ன காப்பாத்து செல்வா என்றபடி
பெருமூச்சு வாங்கி சாய்ந்தாள் அனிதா.
கையில் கிடைத்ததை எடுத்து அமிழ்ந்த லைட்டுகளையும் கன்ட்ரோல் யூனிட்டையும் நொறுக்கினான்.
அனிதா மேல் அவனுக்குள் இருந்த அத்தனை காதலும் அன்று அதீத கோபமாய் வெளிப்பட்டது...
உடனடியாக அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தி காரில் நகர்ந்தான்.
காரில் கொஞ்சம் சுயநினைவை அடைந்திருந்தாள்...
உன்ன காப்பாத்திடுவேன் பயப்படாத என புலம்பினான்.
அவளோ அரைமயக்கத்தில் எனக்கு தெரியும்டா என்றாள்.
அவள் மீதிருந்த காதலையும் அன்று தான் முழுமையாக உணர்ந்தான்.
இருவரும் சென்னையின் ஜீரோவாய்டு செக்ஷனுக்கு சென்றனர்.
அங்கு அனிதாவிற்கு சிகிட்சைகள் அளிக்கப்பட்டன..
இன்று செல்வா அந்த பாஸ்வேடை மட்டும் சரியாக போட்டிருக்கவில்லையெனில் அனிதாவை உயிருடனும் பார்த்திருக்க முடியாது ஜீரோவாய்டும் மெட்டலை இழந்திருக்கும்.
அன்றே செல்வா ஜீரோவாய்டின் உறுப்பினரானான். மெட்டலை பாதுகாக்கும் பொறுப்பும் செல்வாவிற்கு வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு.
சில தினங்களிலேயே அனிதாவும் தேறிவிட்டாள்.
அந்த சம்பவத்தின் பிறகு அவனுக்கு வேறெந்த தேஜாவுவும் ஏற்படவில்லை.
எதிர்காலம் குறித்த எந்த சம்பவமும் ஞாபகத்திற்கு வரவுமில்லை.
அவளை அந்த நாள் காப்பாற்றவும் மெட்டலின் பொறுப்பை ஏற்கவுமே இந்த வாட்ச்டவரை சில தினங்களுக்கு அவன் அடைந்திருக்க வேண்டுமென ஜீரோவாய்டின் அனைவரும் நம்பினர்.
நடந்த சம்பவங்கள் அனைத்தும், செல்வாவிற்கு எதிர்காலம் குறித்து தோண்றியது, தான் காயப்பட்டது, காயப்பட்ட தன்னை அருகில் வைத்துக்கொண்டு பரபரப்பில் பயத்தில் காரை தாறுமாறாக ஓட்டியது, தான் சிகிட்சை பெறும்போது ஜீரோவாய்டின் எத்தனையோ பேர் ஆறுதல் கூறியும் வெளியில் அமர்ந்து குழந்தையை போல் எனக்காக அழுது கொட்டியது என எல்லாமே!! ஏன்!! இந்த பிரபஞ்சமே கூட தனக்காக மட்டுமே படைக்கப்பட்டதாகவும்,
தனக்காக மட்டுமே படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும் தனக்காக மட்டுமே அரங்கேற்றப்படுவதாகவும் அன்று உணர்ந்தாள் அனிதா.
அது சுலபத்தில் சைகைவழி வாய்வழி எழுத்துவழி விவரித்துவிட முடியாத, அப்படியே கஷ்டப்பட்டு விவரித்துவிட்டாலும் மற்றவர்களால் எளிதில் புரிந்துக்கொண்டுவிட முடியாத ஒரு உணர்வு.
ஒரு வழியாக எல்லாம் சுமூகமாக முடிந்தது.
சில வருங்களுக்கு பிறகு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இரு குழந்தைகள் பிறந்துவிட்ட பின்பொழுதில்
என்றோ ஒரு நாள் அனிதா கேட்டாள்.....
அன்னிக்கு எப்டிடா பாஸ்வேட கரெக்ட்டா போட்ட?
சிரித்தபடி சொன்னான்.
எனக்கு தோணுச்சு ஹனி......😉😉😉
___________******_________*****________
########_______######______#####
22-04-2017
00:45:40
செல்வாவின் அறை
உறங்கிக்கொண்டிருந்தவனை ஏதோ ஓர் வெளிச்சமும் ரீங்காரமும் விழித்திடு என்பது போல் எழுப்பியது.
எழுந்து நோக்க ஒளிப்பந்தொன்று எரிந்தமிழ ஒரு சக்கரமில்லா கார் மாதிரியான ஏதோ ஓர் மிஷினின் கதவை திறந்துக்கொண்டு ஒருவன் வெளியே வந்தான்.
அது செல்வா தான்.
ஹாய்..... பயப்படாத..... நான் தான் செல்வா... உன் எதிர்காலத்துலருந்து அதாவது ஒரு என்பது நாள் ஃப்யூச்சர்லருந்து வந்துருக்கேன்...
தூங்காதடா எழுந்திருடா செல்வா எழுந்திருவென கண்களை மூடி புலம்பி கண் விழித்தான்....
எதிரே நின்ற எதிர்கால செல்வா,
இது கனவெல்லாம் இல்ல வேணும்னா கிள்ளி பாத்துக்கோ என சிரித்தபடி கையை நீட்டினான்...
என்னால நம்பவே முடியல.... இது உண்மையா!!!
எதுக்கு இப்போ இங்க வந்துருக்க??
இப்போ நீ ட்ராவல் பண்ணி பத்து நாள் முன்னாடி போகனும் செல்வா... அனிதாவோட உயிருக்கு ஆபத்து... அதுமட்டுமில்லாம ஜீரோவாய்டுக்கும் உன் உதவி தேவைப்படுது....
அனிதாவுக்கு என்ன ஆபத்து?? ஜீரோவாய்டுனா என்ன??
இந்த கேள்விக்கெல்லாம் பதில் எதிர்காலத்துல உனக்கே தானா தெரியும் செல்வா... பயணத்துக்கு முன்ன வேற எதாவது கேட்க வேண்டியிருக்கா?
இன்னும் என்பது நாளுக்கு பிறகு எனக்கு டைம் மிஷின் கிடைக்கப்போகுதா??
ஓகே... முதல்ல இந்த டைம் மிஷினோட வர்க்கிங் ப்ரின்ஸிப்பல உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணிடுறேன்...
சொன்னா நம்ப மாட்ட....
உன்னோட ஜெனரேஷன் ஃபோட்டோகாபி ப்ராஜக்ட்.... அதுல தான் இந்த மிஷின் வர்க் ஆகுது...
உண்மையாவா?? அப்போ இதை நான் தான் கண்டுபிடிச்சேனா??
ம்ம்ம்!!????????? ஆமா அப்டியும் வெச்சுக்கலாம்....
நீ மேக்ரோ காம்ப்போனன்ட்ட டபுல்ஸ்ப்லிட்ல டைமுக்கும் ஸ்பேஸுக்கும் நடுவுல பயணிக்க செஞ்சதோட விளைவு..... இந்த மிஷினால இப்போ காலத்தை கடக்க முடியும்...
நீ நினைச்சது போலவே ஹடுல் ரீஜியன நெருங்கியதும் இந்த மிஷின் ரெண்டா ஸ்ப்லிட் ஆகுது... அந்த டைம்ல ரெண்டா ஸ்ப்லிட் ஆகுற ரெண்டு காம்ப்போனன்ட்டுக்கு நடுவுலயும் ஒரு மாடரேட்டர போடுறோம்.
அந்த மாடரேட்டர் ரெண்டு காம்ப்போனன்ட்ல ஒன்னுத்த வேகமாவும் இன்னொன்ன மெதுவாவும் இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும்....
இதை பயன்படுத்தி ஒருத்தனே ஒரே நேரத்துல ஒரே சிந்தனைல எதிர்காலத்துலயும் இருக்க முடியும் நிகழ்காலத்துலயும் இருக்க முடியும்.
அதாவது பயணம் செய்யுற ரெண்டு பேருல ஒருத்தன் சாதாரண வாழ்க்கைல சாதாரணமா காலத்தை கடக்குறான்....
அவன் கிட்டருந்து பிரிஞ்ச இன்னொருத்தன் அவனுக்கு முன்ன எதிர்காலத்துக்கு போயிடுவான்...
அம்ஐ ரைட்??
எக்ஸாக்ட்லி...
உனக்கு 80நாளுக்கு பிறகு டைம் மிஷின் கிடைக்குமா கேட்டியே......
கண்டிப்பா கிடைக்காது....
என்ன சொல்லுற?? ஏன்??
இந்த மிஷினால இப்போ எக்ஸாக்ட் டைமுக்கு பயணிக்க முடியாது...
நாம போக விரும்புற காலத்துக்கு ஒவ்வொரு ஸிக்ஸாக் டைமிங்கா மாறி மாறி தான் பயணிக்க முடியும்...
அதாவது எட்டாவது மாசத்துலருந்து இந்த மாசத்துக்கும், நேற்றிலிருந்து இன்னிக்கு இப்டி....
அதுபடி பாத்தா அனிதாவை காப்பாத்த வேண்டிய டைம்லைனுக்கு இன்றைய சேர்ந்த உன்னால மட்டும் தான் போக முடியும்..
நீதான் செயினோட பத்தாவது லிங்க்... கடைசி லிங்க்..
இப்போ நான் உன்கிட்ட சொல்லுறது மாதிரி போன வருஷத்துலருந்து வந்து எனக்கு இந்த செய்தியை சொல்லிட்டு போனவன் எட்டாவது லிங்க்.
அதாவது என்பது நாள் அப்பரம் வரப்போற உன்னோட எதிர்கால உன் ரெட்டையனான எனக்கு, இந்த மிஷின் கொஞ்ச காலம் மட்டும் கிடைக்கும் அப்பரம் நிகழ்கால உன் கிட்ட ஒப்படைக்கிறதால இப்போ என்கிட்டருந்து தவறிடும் அவ்வளவு தான்...
புரியுதா??
ஏதோ..... லைட்டா..... என தலையையாட்டினான் நிகழ்கால செல்வா.
அப்பரம் இன்னொரு விஷயம்...
நீ ஸ்ப்லிட் ஆகி உன்னோட இன்னொருத்தனே உனக்கு முன்னாடி எதிர்காலத்தை பாக்குறதால,
அவன் பாக்குற காட்சிகள் எல்லாம் அவனோட ரெட்டையனான இன்னொரு உனக்கும் நிகழ்காலத்துல பிரம்மைகளா காட்சிகளா தோணும்.
அது எப்டி?? பயணிக்கிற அவனால எப்டி எல்லா நாட்களையும் பார்க்க முடியும்??
டைம் ட்ராவல் ட்ரெய்ன் ட்ராவல் போல தான் செல்வா....
ட்ரெய்ன்ல எப்டி ஒரு இடத்துலருந்து இன்னொரு இடத்துக்கு போகும்போது ஜன்னல் வழியா நாம கடக்குற காட்சிய பாக்குறோமோ அப்டி தான்...
காலத்தை கடக்குறப்போ காலத்தோட காட்சிகள பாக்குறோம்.. அது அவன் மூலமா அவனோட ரெட்டையனாட உனக்கும் தெரியுது அவ்வளோ தான்....
சரி புரியுது....
இப்போ அனிதாவுக்கு என்ன பிரச்சன?? அவள காப்பாத்த நான் என்ன செய்யனும் சொல்லு...
இப்போ நான் உன் கிட்ட பேசுறது போல
நீ பயணிச்சு அங்க போனதும் உனக்கு பின் வர ரெட்டையன் கிட்ட உன்னால பேச முடியாது...
நீ கடைசி லிங்க்குன்றதால உனக்கு அதுக்கு டைம் இருக்காது...
அப்பரம் இன்னொரு விஷயம்
சில டைம்லைன் சேஃப்டிஸுக்காக இயல்பா பயணிக்கிறவங்களுக்கு இப்போ நாம சந்திச்சுக்கிட்டது பத்தின எந்த விஷயமும் ஞாபகம் இருக்காது.
அதனால எந்த பிரச்சனையும் இல்ல...
00101110111E
இந்த கோ-ஆர்டினேட்ஸ ஞாபகம் வெச்சுக்கோ....
அங்க போனதும் என்ன செய்யனும்னு உனக்கே தெரியும்.
இன்னும் கொஞ்ச நொடிகள்ல நான் உன்னோட சேந்துடுவேன்.
மிஷின்ல எல்லாமே ஆட்டோமைஸ் ஆகிருக்கு...
நீ உள்ள உக்காந்து அந்த நீல பட்டன அழுத்துறது தான் பாக்கி...
ஆர்யூ ரெடி என்றவன் நிகழ்கால செல்வாவின் பதிலை எதிர்பார்க்கவில்லை.
நொடி தான் ஆகியிருக்கும்...
எதிர்கால செல்வாவை காணவில்லை...
இதை நம்பி தான் ஆக வேண்டும்...
கனவாயிருக்கவோ கற்பனையாயிருக்கவோ வாய்ப்பில்லை.
நிச்சயம் வாய்ப்பில்லை..
போய் அந்த டைம் மிஷினை கொஞ்சம் தடவி பார்த்தான்.
ஆம்... உணர முடிகிறது... நடப்பவை இவையாவும் உண்மை தான்...
ஏறி உள்ளே அமர்ந்தான்.
அந்த நீல நிற பட்டன்.
அழுத்த.....
ட்ராவல் ஷெட்யூல் ப்ரீப்ளான்டு...
மிஷன் டார்கெட் 02-05-2017; 13:00:00
5
4
3
2
1
ஃப்யூஷ்.......
-ராஜ்குமார்@Rajitalks
No comments:
Post a Comment