Friday, August 26, 2016

மாரீசன் 701

மிராசுக்காரய்யா அழைத்து விட்டுருந்ததால் கீதாரி பிள்ளைகள் நாள்வரும் அதிகாலையிலேயே போயிருந்தோம்...
அப்பாவோடு பல ஊர்களுக்கு ஆடு ஓட்டி போயிருக்கிறேன்...
எவ்வூரிலும் கண்டிராதளவு பெரிய பட்டி அவரோடது...
6000 ஆடுகளென்றால் சும்மாயில்லையே!
ஒவ்வொன்றும் சந்தை காணா உருப்படிகள்.!

கொள்ளிடம் கரையோரம் ஒரு வாரம் கிடைக்கு பட்டி கட்ட சொல்லி கேட்டிருந்ததாக கூட்டி வரும்போதே மணிமுத்து அண்ணன் சொன்னார்.
அவர் மொத்த மந்தையின் கண்காணி.
இந்த ஓட்டத்துக்கு நான் போனால் ஆக்காசு இரண்டு ரூபாய் அவசர செலவுக்காகும்....

அய்யா வந்ததும் வணக்கம் சொல்லிக்கொண்டேன்...

பழையார் பாதை மணல்மேடு....
செம்பனார்கோவில் குறுக்க சாவடி....
ரெண்டு ஓட்டம்... ஒரு வாரம் கெட...
தடம் தெரியுமாடா மாரிமொவனே என்றார்...

தெரியும்ங்க.....

சரி....ரெவ்வெண்டு பேரா புடிச்சுக்க.... விவரம் கேட்டு ஓட்டிவிட்டுட்டு வா....
ரெண்டு நாள்ல ஊரு போயிட்டனு சேதி வரனும்.... என்றபடி முத்து அண்ணனிடம் கண்ணை காட்டிவிட்டு கிளம்பினார்...

புதுசா சொல்றதுக்கில்லடா....
பண்ணைக்காரங்க எதாவது கொடுத்தா வாங்கிக்கங்க... மத்தபடி மந்தை பத்திரம்டா....என மந்தைக்காட்டிற்கு அழைத்து சென்றார் முத்து.

போனதும் ஓவென விரட்டினேன்.
அப்பாவோடு ஓட்டிப் பழகிய கூட்டம் மட்டும் என் குரல் கூச்சல் கேட்டதும் தனியே ஓடியது...
எனக்கும் ரெத்தினசாமிக்கும் 700 உருப்படி..
மணல்மேட்டு கிடை...
எண்ணி தட்டி அனுப்ப
ஊரெல்லை வீரன் கோவிலில் நுங்கு சீவி போட்டுவிட்டு வடக்கால விரட்ட மணி காலை எட்டு.

கூட்டணிக்கு என் பட்டி நாய் ராசுவும் வருகிறான்.
பழக்கதாரி... சிறந்த வாலாட்டி...
ஆள் காண மறந்தாலும் ஒற்றையாடு வழி தவற விட மாட்டான்.

செல்லுமிடம் உண்போம்.... சாயுமிடம் உறங்குவோம்... ஊர் தாண்டி சென்றும்
சுவருக்குள் உறக்கமில்லை...
கால்நடையாக விரட்டி செல்கையில்
குழந்தைகளுக்கு கைக்காட்டுவோம்,
குட்டியாட்டை கொஞ்சி கட்டுவோம்,
அவ்வளவு தான் பொழுதுபோக்கு.
அதுவும் போகிற போக்கில் தான்.

இன்று இரண்டாம் இறவு படுக்கை... நரிகளில்லா வெளியை
ஊர் பெரியோரிடம் அடையாளம் கேட்டு தாண்டி பட்டி கட்டி படுத்தாச்சு..
காலை விடியல் கூடவே நடந்தால் பத்து மணிக்குள் ஊருக்குள் போய் விடலாம்.

சொன்ன தேதிக்கு முன்னதாகவே போனால் நாளணா கூட கிடைக்குமென்பதால் 6மணிநேரம் அதிகமாகவே நடந்திருக்கிறோம்.

நேரம் இரண்டு இருக்கலாம்...
நட்சத்திரங்களை எண்ணி களைத்து
கண்கள் தானாய் போய் சொறுகிய வேளையில் நரிகள் ஊளையிடும் சத்தம் வெகுதூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது...
கவனித்திருக்க ராசு வாலாட்டி முகம் கூசினான்.
உறங்கியும் விழி தவறாதிருத்தல் அவசியம்.

கொஞ்ச நேரம் கண்களசந்திருப்பேன்...
விழித்தெழ சூரியன் எத்தனிக்கும்
முன் பொழுதிலேயே மந்தையில் சிறு கூட்டம் தேவையின்றி சத்தமிட்டது...
ராசுவும் தூரத்தில் அலறிக்கொண்டிருந்தான்.
பரபரவென எழுந்து கூச்சல் கேட்ட திசை நோக்கி தடுமாறி ஓட,
பட்டியில் ஒரு இருபது ஆடுகள் மட்டும் தனியே நின்றுக்கொண்டிருந்தன...
என் வருகையறிந்து ராசு வாய் மூடினான்..

உற்று நோக்க உடலூதியிருந்த ஒரு ஆடு மட்டும் வால் நனைந்து நின்றுக்கொண்டிருந்தது..
எண்ணியோட்டும் போதே பெருத்துருக்கே புள்ள தூக்குதானு கேட்டதற்க்கு
சினையாடு பாத்தாலே தெரியாதாடா என திட்டி அனுப்பினார் முத்து.
மந்தையில் சினையாடு சிக்கியது இதுவே முதல் முறை.

கூட்டம் கண்டு வெட்கப்பட்டு நின்கிறாளென்பதையறிந்து பட்டிக்கு வெளியே இழுத்து தூரம் தள்ளியதும் சாய்ந்து விழுந்தாள்...
ரெத்தினமோ தூங்கிக்கொண்டிருந்தான்.

நான் சின்னதாய் ஜாடை காட்டுவதாக தெரிந்தாலும் உயிர் தள்ள மாட்டாள்,
எதுவும் இடையூறின்றி மரத்தோரம் ஒளிந்து நிற்க,
பெரு முக்கலில்
குட்டியாட்டின் தலை முன்பகுதி வெளியே வர தொடங்கியது..

ஓவியங்களில் ரசித்திடா அழகல்லவா!!

நிலவொளி மங்க பறவைகள் பயணப்படும் பொழுதில்
கூட்டதில் கூடுதலாய் ஒரு குட்டி சீற்றம் இணையவிருக்கிறது.

பிரசிவிப்பவள் வலியில் முணகுவதாய் தெரியவில்லை.
தாய்மை எல்லா உயிர்களும் பொது தானே!
கழுத்து வரை எட்டிப் பார்க்கும் குழந்தையை
தேவையின்றி வெளி இழுத்து தள்ள முயற்சிப்பது
இயற்கைக்கு புறம்பானதென்பதோடு
தாய்மைக்கும் இழுக்கானதென்பதையறிந்து
காலப்போக்கில் நடப்பவைக்காக காத்திருக்கிறேன்.

ரசித்திருப்பதை லயித்திருப்பதை அவளறியாள்.
இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் கடற்கரை மணற்துகளாய் இன்னுமொரு உயிர்
சில காலம் வாழ்ந்து செல்வதற்காய்
ஜனனிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

இடுப்பை தாண்டி எட்டியவன்
தலைகள் அசைப்பதை காண
எத்தனை பேருக்கு வாய்க்கும்!
பின்னங்கால் முட்டி வந்ததும் ஓடிப்போய் தூக்கி இழுத்து அசடுகள் விலக்கினேன்.

தாயாடு எழுந்து கடைக்கொடி விழ காத்திருந்தாள்.
இடுப்பிலிருந்த வாங்கரிவாளை எடுத்து சின்னக் கால்களின் குழம்புகள் சீவினேன்..
வெள்ளாட்டு மந்தையில் குட்டியாய் ஒரு கரும்புள்ளி.
முகத்தில் முழு கிடாரிக்கான ஜாடை...

சிலநேரம் நக்கிக் களைத்த தாயவள் முட்டித் தள்ள,
தலைக்கீழ்விழுந்த சிறு அருவியாய் துள்ளித் திரிந்தான் மாரீசன்.
அவனை இனி நான் அப்படி தான் அழைக்கப் போகிறேன்.

ஓடிப்பிடிக்க கூச்சலிட்டு துரத்தியதோடு சூரியனும் அறைந்தெழுப்ப
ரெத்தினம் விழித்து ஆச்சர்யத்தான்.
சந்தோஷப்பட்டான்.

மீதமிருந்த பயணத்தை மாரீசனோடு கடந்தோம்.
#701
ஊர் கிடைக்கு சென்று
மூன்று நாட்கள் மந்தை கட்டியவிழ்க்க சொந்த ஊர் திரும்ப தயாரானோம்.

செல்லும் வழியெங்கும் மாரீசனை தோள்களில் அணைத்துக்கொண்டேன்.
என் துரத்தி கொம்போடு சீண்டி விளையாடுவான்.
ராசுவை விரட்டி தாக்குவான்.
நீரருந்த சென்றாலும் துனையென்னை தேடுவான்.
விழியோடு நானவன் விழி நோக்கி மிரட்ட
போராளியாய் சீறி முட்டி மோதுவான்.
அயர்ந்தமர்ந்து புள்வெளி சாய இடைக்கூசி மயிர் கூச்செரிவான்.
பசுந்தழை முறித்து தலை நீட்டி முகர விட
தன் பால் பற்களால் இலை கடித்து பின் தொடர்வான்.
பிறந்தைந்து நாட்களில் அவனின் சிறந்த சகோதரனானேன்.

மூன்று நாட்கள் பிரயாணமாய்
மந்தைக்காட்டுக்கே திரும்ப
எழுநூற்றி ஒன்றோடு எங்களுக்கும் சரியான களைப்பு.
உருப்படிகளை எண்ணியடைக்கும் வேளையில் மாரீசனை பார்த்து சந்தோஷப்பட்டார் முத்து அண்ணன்.
மேய்ப்பு கூலியை வாங்கி நான் திரும்ப,
தாயாடு பட்டிக்குள் நின்று மாரீசனை மேவென அழைத்தது...

தன் தாயிற்கும் எனக்குமிடையே நின்ற அவனோ நொடி காத்து
என்னை நோக்கி பாய்ந்தான்.
வேகமாய் ஓடி வந்த மாரீசனை நோக்கி நான் மண்டியிட
வேகமாயொருமுறை என் மார்மோதி திரும்பி சென்று தாயை அனைத்தான்.

இந்த காதலின் பிரிவை என்னால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஈரடி நடந்திருப்பேன்.
திரும்பி பட்டியை காண
மந்தையில் ஒளிந்துவிட்டான் மாரீசன்.

நயமாய் நகர்ந்து முத்து அண்ணனை நோக்கினேன்.

அண்ணே.... ஒரு சின்ன கோரிக்கை...

என்ன..!? சாப்டு போறியா..... மேகலை....... என தன் மகளை அழைத்தார்...

அண்ணேணே.... அதுயில்லணே.... அந்த ஆட்டுக்குட்டி.....

ஆமா.... பத்திரமா கூட்டியாந்துட்ட.... பரவால்லயேடா....

இல்லணே.... அதை எனக்கு கொடுத்துடுறிங்களாணே!!
நான் கொஞ்சம் கொஞ்சமா வேலை செஞ்சு மந்தையோட்டி கழிச்சுடுறேன்ணே.... என கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

ஏன்டா... உங்களுக்கெல்லாம் ஆடு மேய்க்க விட்டு சோறு போட்டா முதலாளியாக ஆசை வருதா....என ஓங்கியுதைக்க
தரைத் தஞ்சமானேன்.....


உன்னையெல்லாம் நம்பியினி ஆட்ட ஓட்டி கொடுத்தா போற வழில வித்துட்டு ஊர விட்டு ஓடிடுவ....
டேய்.... இவன........ இனியிவன் வந்தா பந்தலுக்குள்ள விடாதடா.... உதைச்சு அனுப்புடா அவன....என ஏதேதோ சொல்லி திட்ட திட்ட விழியோரம் சிற்றருவி... அவ்விடத்தை விட்டு நெடுநடந்து நகர்ந்தேன்....

உணர்வுகளுக்குரியவர்களுக்கு உறவுகளில்லை.

-ராஜ்குமார் @RajiTalks

Tuesday, August 23, 2016

கால முடிவிலி - Episode 1

கல்லூரி படிப்பை முடித்த கையோடு தொடங்கிய ஆராய்ச்சி.
இத்தனை வருடங்களாக சுவர்களுக்குள்ளேயே முடங்கி விட்டேன்!
இது தான் என் லேபாரட்டரி, வர்க்ஹவ்ஸ், வீடு, சொந்தம், உணர்வு, வாழ்க்கை, கனவு எல்லாமே!
பார்த்திபன் என் பால்ய சிநேகிதன்,18வருட நட்பு, சக ஆராய்ச்சியாளன், மிடில் க்ளாஸ் ஐன்ஸ்டைன்.
ஆரம்பகாலத்தில் என் வற்புறுத்தல் காரணமாக இதில் இணைந்தவன்.

தற்போது கிட்டதட்ட மெஷின் ரெடியாகிவிட்டது....
68 சோதனை ஓட்டங்களின் முடிவில், பல்லாயிரம் செட்டப் திருத்தங்களுக்கு பிறகு,
இறுதி சோதனையை சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறோம்...

இடம் : சிவாவின் லெபாரட்டரி,
நேரம் :  13:40,     12-12-2016
▼▼▼▼▼▼▼▼▼▼

டக்...டக்...

வந்திருப்பது அவன் தான்...
வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சோர்வாக இருப்பது போல் தெரிகிறான்...
தினசரி ஜிம்முக்கு செல்பவன்... உடல்நலம் மீதான அக்கரை அதிகம்...

உனக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்.....
Final experimental drive..... பண்ணிடலாமா பார்த்தி??

ஆமாடா.... இதுக்காக தான காத்திருந்தோம்! என்றபடி நாற்காலியிலிருந்து எழுந்து அறையின் நான்கு மூலைகளிலுமிருந்த worm antennaக்களை ஒவ்வொன்றாய் ஆடியசைந்து அட்ஜஸ் செய்தான்.

ஒன்பது வருஷமாச்சு...
நாம இவ்வளவு தூரம் வருவோம்னு நினைச்சு பாத்தியாடா?
..........அதை கொஞ்சம் தள்ளு,
வெஸ்ட் கார்னர் 12டிகிரி.......

............ரிசர்வயரை நகர்த்தியபடி.......
கண்டிப்பா இல்ல சிவா.... நீ முதல்ல இதை பத்தி சொல்லும்போது கொஞ்சம் யோசிச்சேன்... இதெல்லாம் பாஸிபிளானு....
உங்கப்பா கிட்ட ஏகப்பட்ட பணம் கொட்டி கிடக்கு.... அவர் ஹெல்ப் பண்ணலனா கண்டிப்பா இல்ல...
........ஸ்பானரை கீழே தள்ள கிளிங்க்ளாங் சத்தம்......

பாத்துடா.......
Latitude & longitude???

இதே இடம்.... Fixed gps..... மாத்த வேண்டாம்....
வீடு தான் வசதியாயிருக்கும்..... எல்லாத்துக்கும்.....

சரி பார்த்தி... ஹெடா.... டெய்லா.....

டெய்ல்.....

.......................ஃப்ளிங்......................

ஹெட்ஸ்ஸ்ஸ்ஸ்.....
ஹாஹா....  இந்தா பிடி..... இது உன் டர்ன்... அதென்ன கைல ஸ்பானர்!? தூக்கி போடு.....
என பிடுங்கி எறிந்துவிட்டு, Wrist transmitterஐ பார்த்திபன் கையில் மாட்டினேன்...

நியாபகம் இருக்குல்ல.!? இந்த ட்ராண்ஸ்மிட்டர் தான் உன்னையும் இந்த டைம்லைனையும் கனெக்ட்டடா வெச்சுருக்கும்.....

இருக்குடா.... நீச்சல் தெரியாதவன் இடுப்புல கயித்த கட்டிட்டு
இன்னொரு முனைய மரத்துல கட்டிட்டு ஆத்துல இறங்குறது போல..... அதான???

ஹாஹா.... அதே தான்.... சரி... portal length என்ன வைக்கட்டும்??

+50 வருஷம்...... என்றபடி சத்தமாக சிரித்தான்......

ஏய்!! இது ரொம்ப ரிஸ்க் பார்த்தி.... விளையாடாத.....

மறந்துட்டியா? 34 தடவ ட்ராவல் பண்ணிட்டேன்.... எல்லாம் 10-20min தூரம்...
எந்த தப்பும் நடக்கப் போறதில்ல சிவா.... We are making history.... and even we can rewrite it too.....

நாம ரீரைட் பண்ண இதை செய்யலடா.... முட்டாள்தனமா உளறாத.....
TimeRingலயோ multiverseலயோ மாட்டிக்கிட்டனா என்ன செய்ய.!?
நம்மளோட Transmitter அவ்வளவு lenghthy distanceஐ தாக்குப் பிடிக்குமானு கூட தெரியாது.....

We have this huge ultra magnetize systemடா..... இது 500வருஷ தூரத்துக்கு கூட worm portalல develop பண்ணும்....
எல்லாம் தெரிஞ்சு நீயே!?
ரிஸ்க் என்னோடது தான சிவா....

தெரிஞ்சதனால தான் சொல்லுறேன்....
கொஞ்சம் யோசிடா... portalல்ல காலத்தை பிண்ணுறதே கஷ்டம்.....
itz will be an accurate martrix....
அதை செய்ய எவ்வளவு கஷ்டப்பட்டோம்!?
1-2வருஷம்னா கூட பரவால்ல.....
ஈசியா மேட்ரிக்ஸ்ல இருந்து you can go out and back to the same timeline...
ஆனா 50வருஷம்லாம்......................
No பார்த்தி..... i cant do this....

அப்பரம் இந்த mountingsலாம் எதுக்கு??
ப்ளீஸ் சிவா...... இந்த Soul pullerஐ பாரு.... நான் எந்த டைம்லைன்ல எவ்வளவு தூரத்துல சிக்கினாலும், இது என் கைல இருக்குற ட்ரான்ஸ்மிட்டரோட கனெக்ட் ஆகி,
Emergency portalஐ உருவாக்க போகுது... டைம் ரிங்கோட நாட்டும் ப்ரேக் ஆகிடும்....
ஏன் தேவையில்லாம பயப்படுற.!??
ப்ளீஸ்டா.....

ரொம்பவே தயங்கினேன்... இது கடைசி டெஸ்ட்டிங்... சக்ஸஸ் ஆகிவிட்டால் நாளை காலை உலக டிவிக்களும் நாளேடுகளும் எங்கள் முகத்தை தான் காட்டும்... முதன்முதலில் டைம் மிஷினை கண்டுபிடித்த இந்தியர்கள் என்று....
அதற்க்காக இந்த ரிஸ்க்கை எடுக்கலாம் என்று தோண்றியது....

சரிடா.... ஆனா சஸ்டைன் டைமிங் 59செகன்ட்ஸ் தான் வைப்பேன்....
அதுக்குள்ள நீ Traveled proofsஐ V-Documente பண்ணிடனும்....
ஒருவேளை............. பண்ண முடியலனாலும் பரவாயில்ல....
Soul puller will activate the trasmitter on fixed time automatically....

ஹாஹாஹா....
இது போதும் சிவா..... i am ready.....என்றபடி போய் core tubeக்குள் நின்றான் பார்த்திபன்...

கோர் ட்யூப் என்பது சிஸ்டமில் வாம் போர்ட்டல் உருவாகும் பகுதி....
அதன் வழியே உறிஞ்சப்படும் பொருளே காலப்பிரயாணத்தை மேற்கொள்ளும்..
போர்ட்டலோடு பிண்ணியிருக்கும் கால மேட்ரிக்ஸில் பொருளானது விடுபட வேண்டிய இடத்தில்,
அதாவது பயணிக்க விரும்பிய காலத்தில் பிண்ணலை உடைக்க வேண்டும்....
இதை தான் நான் Amplitude panelல் இருந்து செய்யப்போகிறேன்....

சிஸ்டத்தை ஸ்டாட் செய்துவிட்டு பார்த்திபனிடம் கையை காட்டினேன்....

**System automized.
PreDetermined datas installing...
Datas installed.
portal navigation analysing...
Navigation found succesfully.
Confirm your transmitter id...** (கணிணிக்குரல்)

##Project நேரம் -  Reference ID PS

**Transmitter ID confirmed...**

கோர் ட்யூபை சுற்றி கருநிற கோளமொன்று ஒளிஉமிழ்ந்தெழ கண்கூசி காகுல்ஸை பொத்தினேன்...

**Portal opens...
7
6
5
4
3
2
1**

பார்த்திபன் மறைந்தான்....

இரண்டு நிமிடங்களாக போர்ட்டலை வெறித்து நோக்கிக்கொண்டிருக்கிறேன்...
பதட்டம்....
Amplitude panelஐ கவனிக்கிறேன்....
மேட்ரிக்ஸ் சரியான இடத்தில் உடைக்கப்பட்டுவிட்டதாக சுட்டியது....
அதாவது பார்த்தி 2066க்கு பயணித்துவிட்டான்...
இந்நேரம் சோல் புள்ளர் ரிட்டன் கவுண்ட் டௌனை தொடக்கியிருக்க வேண்டும்...
இந்த தாமதம் ஆபத்தானது...
செய்வதறியாது விழிபிதுங்கி நின்றேன்....

-----------------------------------------------------

கண் விழித்துப் பார்க்கும்போது உடலசைக்க முடியா நிலையில் தலையை மட்டும் சில டிகிரி கோணங்களில் திறுப்பிக்கொள்ள முடிகிறது.!
வேறேதோ உடையில்,
மேசையோடு கழுத்து மற்றும் கைக்கால்களை தைத்திருக்கிறது இந்த உலோக காப்புகள்.

கழுத்திலும் வலது மார்பிலும் பலமுறை ஊசிகளால் துளைக்கப்பட்டிருக்கிறேன்!
வலியுணர்த்தியது.
அவை சிகிச்சையாயில்லாமல் ஏதோ சில பரிசோதனைகளாகவோ ஆராய்ச்சியாகவோ இருந்திருக்க வேண்டுமென்று!
சுற்றி எங்கிலும் வயர்களும் ட்யூப்களும் நவீன ஆராய்ச்சி சாதனங்களும்.
அவற்றில் அந்த SEM SUITஐ தவிர வேறு எவையும் எனக்கு இதற்கு முன் அறிமுகம் கூட இல்லாதவை!

எளிதில் என்னால் விளக்கிவிட முடியும் தான்.
ஆனால் அனைவராலும் சுலபத்தில் புரிந்துக்கொள்ள முடியா மனநிலையிது.
Sleep paralysisஐ உணர்ந்தவர்களுக்கு புரியும்!
அப்படிப்பட்ட ஒரு விழிநிலையில் தான் வீழ்ந்திருக்கிறேன்!

இரு மணிக்கட்டுகளும் படுக்கையோடு பூட்டப்பட்டிருக்க இடதுகையோரம் ஒரு ஸ்விட்ச் தட்டுப்பட்டது!
பசியின் பாதி மயக்கத்தில் சில கலோரி உணவுக்கு தவிக்கும் உடலயர்ந்த ஒருவனும்
ICU வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அரை நினைவு நோயாளி ஒருவனும் கூட எளிதில் அழுத்தி விட முடிகின்ற ஒரு புஷ் பட்டன் அது.
பட்டனை அழுத்தியதும் கால்மாட்டிலிருந்த ஒளிப்பெருக்கி அலறியது.

ஒரு பெண்ணின் பதிவு செய்யப்பட்ட கணிணிக்குரல்! கன்னிக்குரலென்றும் கூறலாம் தான்.

**TIME CLONES INC, ஆராய்ச்சிக்கூடம் ஏஜென்ட் ஹரிபிரகாஷ், LOCK NO-7, KEY NO-1. உங்கள் பெயரின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் ஒவ்வொன்றாய் கூறவும்** என்றது.
இது ஒரு ஆட்டோ வாய்ஸ் ரெகக்னேஷனாக இருக்க வேண்டும்.
ஏன் பதிலளிக்க வேண்டும் விளைவுகள் என்னவாயிருக்கும் என்பதை பற்றியெல்லாம் நான் அப்போது யோசிக்கவேயில்லை.
எனக்கு அப்போது தோண்றியதெல்லாம்
டோன் மைக் தூரத்திலிருந்தால் நானளிக்கும் பதில் கேட்காமல் போய் விடுமே என்பது மட்டும் தான்.

Pee...A...Aar...Tee...Hech...Eye...Bee...A.....En...என கத்தினேன்.

கணிணியின் பதில்.
**தவறான பின்னூட்டம்.... மீண்டுமொருமுறை முயற்சிக்கவும்**

தோள்பட்டையை அப்போது தான் கவனித்தேன்....
Time Clones inc Ref.name AARZ88 என எழுதியிருந்தது....

மறுபடியும் கத்தினேன்.....
A.....A .....AAR.....ZET.....EIGHT....EIGHT...

**முதல் Lock திறக்கப்பட்டது.
Key no-2.
100லிருந்து 1வரை எண் ஏழை கழித்து சொல்லவும்** என்றது.

நான் சுயநினைவில் தான் இருக்கிறேனா என்பதை கணிணி வழியே யாரோ பரிசோதித்திக்கொள்ள முயற்சிப்பதாய் நினைக்கிறேன்.
ஆனால் இதற்கெல்லாம் அவசியமென்ன!
தேவையற்ற சுயகேள்விளை கேட்டுக்கொள்வதற்கு இந்த கட்டுகளில் இருந்து நான் விடுபட்டுவிட்டாலே அவற்றிக்கு பதில் கிடைத்துவிடுமென நம்பினேன்.

100....93.....86....79............என கத்தி கடைசியில் இரண்டு என்றேன்.

**கடைசி பூட்டு விடுபட்டது**
என்றதும் கைக்கால்கள் மற்றும் கழுத்து காப்புகள் கழண்டன, அறையில் எரிந்துக்கொண்டிருநத பச்சை நிற விளக்குகள் நீல நிறத்தில் ஒளிர்ந்தன.

மெதுவாக எழுந்து மேசையிலிருந்து காலை கீழே தொங்கவிட்டு அமர்ந்தேன்.
காலுக்கும் தரைக்கும் இடையே உள்ள தூரத்தை என்னால் சரியாக கணித்துவிட முடியவில்லை.
கண்கள் பார்ப்பதையெல்லாம் மூளை நம்பிவிட மறுக்கிறது போலும்.
இரண்டடிக்கு மேல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் 20மாடி குடியிருப்பின் மொட்டைமாடி தண்ணீர் தொட்டியின் மேல்
அமர்ந்திருப்பதை போன்றதொரு எண்ணம்.
இல்யூஷன்.
எங்கே எழுந்தால் உயரத்திலிருந்து விழுந்து அடிபட்டு விடமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.

மெதுவாயிறங்கி அறைக்கதவை திறக்க
பேரதிர்ச்சிக்குரிய காட்சிகளை நோக்கினேன்.
அது மிகப்பெரிய பிரம்மாண்டமான ஒரு லெபாரட்டரி.
நான் வந்திறங்கியது போல & அதை விட அதி நவீன நூற்றுக்கணக்கான கோர் ட்யூப்களோடு ஏகப்பட்ட விஞ்ஞானிகள் நின்று ஆப்ரேட் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாய் புரியத் தொடங்கியது.
கையை பார்க்க என் ட்ரான்ஸ்மிட்டரை காணவில்லை...

பின்னாலிருந்து யாரோ எலெக்ட்ரிக் ஷாக் வைக்க
சுருண்டு கீழே விழுந்தேன்.
யாரு நீ?? இங்க எப்டி வந்த??
வக்ர் ஸ்டேஷன் Z88...
கன்ட்ரோல் சிப்பும் இன்னும் பொறுத்தலயே......என ஆக்ரோஷமாய் மிரட்டி
கைகளை வளைத்து பின்னால் காப்பிட்டான்.

நான் தெரியாம இங்க வந்துட்டேன்ங்க.... நான் வேற காலத்தை சேர்ந்தவன்..... 2016... என்று கத்த எதையும் கேளாது
தரதரவென இழுத்து சென்று ஒரு அறையில் அடைத்தான்..

அறையில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தனர்.
நான் வந்ததையே அவர்கள் கவனித்ததாய் தெரியவில்லை.

ஏங்க.... நீங்கயெல்லாம் யாரு?? இது எந்த இடம் எந்த வருஷம்??? இங்க என்ன நடக்குது...!???

தலை நிமிர்ந்து பார்த்து பின் திரும்பிக்கொண்டனர்....
இது மிக முன்னேறிய ஒரு சமூகமாக தெரிகிறது... இது எங்கள் மிஷின் மாடல் தான்.... எதிர்காலத்தில்... அதாவது நான் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த தற்காலத்தில் பெரிய முன்னேற்றத்தை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது....

நிச்சயம் சிவா என்னை மீட்டெடுப்பதற்காக ஏதாவது முயற்சிகளை செய்துக் கொண்டிருப்பான்....
▲▲▲▲▲▲▲▲▲▲▲
இடம் : சிவாவின் வீடு இருந்த இடம், தற்போது அதிநவீன தொழிற்சாலை
நேரம் : 16 : 33    12-12-2066

-------------------------------------------

இடம் : சிவாவின் லெபாரட்டரி
நேரம் : 22 : 20     12-12-2016
▼▼▼▼▼▼▼▼▼▼▼▼

ஏழெட்டு மணிநேரமாக சிஸ்டத்தின் லூப்களை கண்டபடி மாற்றி மாற்றி பார்த்திபனை தேடிக் கொண்டிருக்கிறேன்..
ட்ரான்ஸ்மிட்டரை எப்படியோ தவற விட்டிருக்கிறான்.
அல்லது பிரயாணத்தில் அதுவே நேரத்தில் கரைந்திருக்க வேண்டும்...
அவன் மாயமானதை தியாகமாகவெல்லாம் ஏற்று கடக்க முடியாது...
வேறேதும் டைமன்ஷனில் சிக்கிக் கொண்டானா என தெரியவில்லை!
எப்படியாயின் அவனை மீட்டெடுக்காமல் இங்கிருந்து நகர்வதாயில்லை.
இரவு 12மணிக்குள் எந்த லூப்பிலும் அவன் கிடைக்கவில்லையெனில்....................

திடீரென சோல் புல்லர் அலறியது.....

பீப்... பீப்....பீப்....பீப்.... பீப்....
பார்த்திபன் தான் என்னை தொடர்புகொள்ள அழைக்கிறான்......

மைக் & ஸ்பீக்கரை ஆன் செய்தேன்....
பார்த்தி.....பார்த்தி... நான் சிவா.. கேக்குதா.... நான் பேசுறது கேக்குதா......

பதிலிடத்தில் பதட்டமான குரல்....

சிவா... நீ பேசுறது எனக்கு கேக்காது.... நான் சொல்றத தெளிவா கேட்டுக்கோ... இங்க நான் நல்லா மாட்டிக்கிட்டேன்... என்ன அரெஸ்ட் பண்ணி வெச்சுருக்காங்க...
நாம கண்டுபிடிச்சுருக்குற டெக்னாலஜிய இங்க எல்லாம் பப்ளிக்கா தப்பா பயண்படுத்திட்டு இருக்காங்க.... உன் வீடு.... அது இருந்த இடத்துல இங்க 2066ல பெரிய இன்டஸ்ட்ரியே இயங்கிட்டு இருக்கு....
இவங்க க்ளோனிங் பண்ணிட்டு இருக்காங்க... திரும்ப என்னால உன்ன எப்போ தொடர்பு கொள்ள முடியும்னு தெரியல.... என்ன காப்பாத்து... எப்படியாவது.............
*Time Clones incredibles. Voice portal closed..*
ஃப்யூஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.....

குரல் நின்றது.........

எப்படியாவது பார்த்தியை காப்பாற்றியாக வேண்டும்....
நிறைய யோசித்தேன்..... ஒரே முடிவு....
இதை தவிர வேறு வழியில்லை....
இதை நான் செய் தான் ஆகவேண்டும்....

சோல் புள்ளரில் சஸ்டைன் டைமிங் 2மணிநேரம் என வைத்தேன்...
ஆட்டோ சேனல் ப்ரேக்கர்....
என் சிஸ்டத்தை நிச்சயம் நம்புகிறேன்...
ட்ராண்ஸ்மிட்டரை கையில் கட்டிக்கொண்டு கோரில் போய் நின்றேன்......

இடம் : சிவாவின் வீடு
நேரம் : 22:30      12-12-2066
▼▼▼▼▼▼▼▼▼

வவ்வால்களாய் பறந்தன....
பயந்து அலறி கைகளையாட்டி விரட்டினேன்.
என் வீடு.... மிகவும் பாழடைந்து கிடக்கிறது....
எங்கும் கரையாண்களும் ஒட்டடைகளும்... என் லேப் இருந்த இடத்தில் இப்போது எதுவுமேயின்றி காலியாக கிடக்கிறது....
பின் கதவை திறந்து வெளியே வந்தேன்...
என் வீடு இருந்தது பண்ணைகளுக்கு நடுவே... அப்போது வீட்டை சுற்றி 2கிலோமீட்டருக்கு எதுவுமே இல்லாத தனிமையிடம்...
இப்போது வீட்டிற்கு ஐந்தடியில் பல அடுக்கு மாடி குடியிருப்புகளாய் இருக்கின்றன...
ஐம்பது வருடங்களில்
இது ஒரு நியாயமான வளர்ச்சி தான்....
ஆனால் மூளைக்குள் பார்த்திபனின் செய்தி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது...

### உன் வீடு.... அது இருந்த இடத்துல இங்க 2066ல பெரிய இன்டஸ்ட்ரியே இயங்கிட்டு இருக்கு....####

பக்கத்தில் ஒரு பார் இயங்கிக்கொண்டிருப்பதை பார்த்து உள்ளே நுழைந்தேன்...
ட்ராண்ஸ்மிட்டரும் கூடவே 55minutes left என்றது...
அதிநவீன குடிகார பட்டறை...
ஆங்காங்கே உலவும் அதிகபட்ச வெளிநாட்டவர்....
முன் வாசலில் இருந்த பார்டென்டரிடம் பேச்சு கொடுத்தேன்....

என்ன வேணும் சார்.....

அந்த பாழடைஞ்ச பில்டிங்??
விலைக்கு வரும்ங்களா??

ஹாஹா... வாய்ப்பில்ல சார்... சுத்தி பில்டிங்ஸா எழும்பிட்டு... ஆனா அதோட ஓனர் அந்த வீட்ட மட்டும் விக்க மாட்டேனுறாரு... இடத்த இடிச்சுட்டு அப்பாட்மெண்ட் கட்டினா கொள்ளை காசு வரும்.... செத்து போன பையன் ஞாபகமா வெச்சுருக்காரு என்றார்....

(என்ன.!! நான் செத்து போயிட்டேனா.!!)
யார சொல்லுறிங்க? ஸ்டீல் இண்டஸ்ட்ரி ஓனர் சத்தியபிரகாஷா??

ஆமாங்க.. அவரோட பையன் ஒருத்தன் செத்து போயிட்டான் அந்த வீட்டுல... ஒரு நாற்பது அம்பது வருஷத்துக்கு முன்ன... ரெட்ட கொலை நடந்த வீடு...
நீங்க யாரு? எதும் ரியல் எஸ்டேட் பார்ட்டியா??

பதட்டம் தொற்றிக்கொண்டது... ஒன்றுமே புரியவில்லை...

சார்... இங்க லைப்ரரி எங்க இருக்கு??
இல்ல கம்ப்யூட்டர் வேணும்.... ஒரு விஷயத்தை எப்படி தேடி கண்டுபிடிக்கிறது? கூகுல் மாதிரி???

எந்த காலத்துல தம்பி இருக்கிங்க?
உங்ககிட்ட நானோட்யூப் இல்லயா??
சாதாரண பார்டென்டர் என்கிட்டயே இருக்கு!
பாக்க பணக்கார வீட்டு புள்ள போல தெரியுற??
சரி இந்தாங்க என வாட்சின் ஒரு பட்டனை தட்ட,
ஹாலோ விஷுவல்கள் விரிந்தன...

என்ன வேணுமோ வாய்ஸ் நோட் கொடு என்றார்...

டைம் மெஷின்.... டைம் க்ளோனிங்.... சிவபிரகாஷ்.... பார்த்திபன் என ஏதேதோ நோட்ஸ் கொடுத்து பார்த்தேன்....
எல்லாவற்றிக்கும் விடையாய்
டைம் மெஷின் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆரம்ப கட்ட ஆராய்ச்சியிலேயே உள்ளது எனவே சொல்லியது...

பார்த்திபனின் வாய்ஸ் நோட்டின் முடிவில், பின்னால் ஒரு கம்ப்யூட்டர் குரல்
Time Clones incredible என சொல்லியதை கவனித்தேன்....
அதை இன்புட்டாக அளிக்கையில் பயோ டெக்னாலஜியில் க்ளோனிங்கின் முன்னேற்றத்தை பற்றிய செய்தி மட்டுமே இருந்தது...
டைம் ட்ராவல் பற்றிய எந்த தரவுகளும் அதிலில்லை...
No exact results found for your search about Time Clones Inc.

தலையை முட்டிக்கொள்ளலாம் போல் தோண்றியது....

க்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஆஆஆஆஆ........

///////////உன் வீடு.... அது இருந்த இடத்துல இங்க 2066ல பெரிய இன்டஸ்ட்ரியே இயங்கிட்டு இருக்கு....//////////// இடத்த இடிச்சுட்டு அப்பாட்மெண்ட் கட்டினா கொள்ளை காசு வரும்.... செத்து போன பையன் ஞாபகமா வெச்சுருக்காரு/////////////நாம கண்டுபிடிச்சுருக்குற டெக்னாலஜிய இங்க எல்லாம் பப்ளிக்கா தப்பா பயண்படுத்திட்டு இருக்காங்க..../////////// No exact results found for your search about Time Clones Inc////////

கண்டபடி கத்திக்கொண்டு சாலையில் நடந்தேன்...
ட்ரான்ஸ்மிட்டரை கவனிக்க
45seconds left என்றது....

*Soul puller activating the instant portal...
Return coundown starts...
5
4
3
2
1
You are again back to the same timeline 00:30, 13-12-2016 succesfully....*

(தொடரும்)

-ராஜ்குமார்.ரா @RajiTalks