கபாலி என்ற பெயரை பட தலைப்பாக அறிவித்துவிட்ட போதே
குறிப்பிட்ட பகுதிசார் விளிம்புநிலை மக்கள் பற்றிய
பிற வெகுஜன மக்களின் பார்வை மற்றும் தமிழ் திரையுலக காட்சியாக்க & கதாப்பாத்திர வடிவமைப்பு மற்றும் அதன் பின்னாளுல்ல அரசியல் மீதான ரஞ்சித் அவர்களின் சமூக பார்வை, கோபம்
மற்றும் ஆதங்கம் பெரியளவில் வெளிப்பட்டுவிட்டதாகவே நினைத்தேன்!
"ஏஏ...போ அங்க... ஒதுங்கி போறதெல்லாம் அந்த காலம்" என்ற கோபத்தை
ஒரு சாதாரண துணை கதாப்பாத்திரத்தின் வாயிலாக பேச வைப்பது சுலபம் தான் என்றாலும்
ரஜினி என்ற ஒரு கமர்ஷியல் ஜெய்ன்ட்டை ரஞ்சித் எப்படி கையாளுவாரோ என்ற பயம்
என்னை போல பலருக்கும் இருந்திருக்கலாம்!
கபாலி என பெயர் வைப்பதை மட்டுமே தாண்டி ஒரு
சூப்பர்ஸ்டார் இதுவரை
முயற்சித்திடாததை தன் வரையறைக்குள் கொண்டு வரவேண்டுமே என்பது ரஞ்சித்திற்கு (மெட்ராஸின் கதைக்காரண வெற்றியினால்) எவ்வளவு பெரிய
சவாலாக(இல்லாமலும் இருந்திருக்கலாம்) இருந்திருக்கும் என்பதை சாதாரண சினிமா ரசிகனாக உணர முடிகிறது.
உண்மையிலேயே ரஜினிகாந்த் என்ற பிரம்மிப்பை தாண்டி பா.ரஞ்சித் அவர்களின்
கோபத்தை அந்த ஒன்றரை நிமிட டீசரின் காட்சி வரிசையமைப்பிலேயே காண
முடிந்தது!
ஆக்ரோஷ பின்னணியிசை, டான் கெட்டப், துப்பாக்கி சண்டையென மேற்போக்கில்
வழக்கமான ரஜினி சாயலினான கதையாக
தெரிந்தாலும் அப்படியிருக்க வாய்ப்பில்லையென மனதிற்குள் அழுத்தி சொன்ன விசையின் காரணமானது ரஞ்சித்
மீதான நம்பிக்கையாலும்(டீசரை மட்டுமே வைத்து படத்தின் வெற்றியை ஊகித்துவிட முடியாதென்பதால்) மற்றோரை
போலவே என்னையும் கவர்ந்த டீசரின் அந்த ஒரு வசன காட்சியாலும் தான் தான்!
தமிழ்சினிமாவின் பிரதான கதாபாத்திர கட்டமைப்புகளின் தர்கங்களாக நாம் எண்ணிக்கொண்டிருப்பவற்றை
பொய்யென சுட்டிக்காட்டி,
பின்வரும் "குனிஞ்சு சொல்லுங்க எஜமான் அப்டி வந்து நிப்பானே அந்த கபாலினு நினைச்சியாடா" என்ற வசனத்திற்கு
அடுத்து வரும் அதிரடி காட்சி திட்டமிட்டு வரிசைப்படுத்தப்பட்டதோ அல்லது இல்லையென்றாலும் அட்டகாச ரகம்!
உண்மையில் மெட்ராஸ் & அட்டகத்தி படங்கள் பேசிய அத்தனை அரசியலையும் இந்த ஒரு வசனம் மட்டுமே பேசி விட்டதாக உணர்கிறேன்!
இயக்குநர் என்ன சொல்ல நினைச்சாரோ ஆனா அவரு சொல்ல வந்ததை என்னால
இப்படி தான் புரிஞ்சுக்க முடிஞ்சுது!
டீசரை பொறுத்தவரை இது ரஜினி என்ற பிரம்மாண்டத்தின் வாயிலாக அல்லது உதவியுடன் வழக்கமான கமர்ஷியல்
பாணியில் ரஞ்சித் கதைக்காவோ ரஜினிக்காகவோ தனக்குள் எந்த காம்ப்ரமைஸும் செய்துக்கொள்ளாமல்
எடுத்த மாற்றத்திற்கான ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பாகவே தெரிகிறது!!
வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா... #மகிழ்ச்சி
பி.கு : இருங்க இன்னுமொரு பத்து தடவ டீசர பாத்துட்டு வரேன்.....உள்ள ஏதும்
பூனை கிடக்கானு பாப்போம்
குட் 1
ReplyDeleteசூப்பர் :-}
ReplyDeleteamas32
கலக்குடியோவ்...
ReplyDeleteபூதக் கண்ணாடி வேணுமா?
@emraaj
கலக்குடியோவ்...
ReplyDeleteபூதக் கண்ணாடி வேணுமா?
@emraaj