Saturday, June 22, 2019

கால முடிவிலி - Episode 4

வண்டி அங்குமிங்கும் அலைக்கழிக்கலானது.
கண்டைனரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தான் பார்த்திபன்.
வண்டியின் பின் சக்கரம் உராய்விழந்து தடுமாறி கவிழ
உள்ளிருந்த எல்லா க்ளேடி க்ளோன்ஸ் சப்-கண்டைனர்ஸும் நொறுங்கி விழந்து பற்றி எரிய தொடங்கியது.
வெளியே வந்து விழுந்த அந்த முரடன் பார்த்திபனை சரமாரியாக தாக்க ஆரம்பித்தான்.

இங்க உன்ன காப்பாத்த எந்த அட்வான்டேஜும் இல்ல...
உன் சாவு என் கைல தான்...

பார்த்திபனும் சும்மா இல்லை.
எதிர்த்து தாக்கினான்.
தீயில் எரியும் வண்டியிலிருந்து தப்பிய சில காவலர்கள் மின்சார ஈட்டி கொண்டு இருவரையும் தாக்கினர்.
காவலர்கள் கையிலிருந்த ஈட்டியை பிடுங்கிய முரடன் காவலர்களை அடித்து தூக்கி நெருப்பிலெறிந்தான்.
தற்காத்து தாளாத பார்த்திபனை மலைச்சரிவிலிருந்து தூக்கி கீழே வீசினான்.
இருந்தும் அவன் கோபம் தீர்ந்த பாடில்லை.
மலைச்சரிவில் தானும் தாவிப்போய் வீசப்பட்ட இடத்தில் பார்த்திபனை தேடினான்.

ஒரு மரக்கிளையில் சிக்கித் தொங்கிக்கொண்டு இருந்தான் பார்த்திபன்.
தன் கையிலிருந்த மின்சார ஈட்டியை எடுத்து பார்த்திபனை நோக்கிப் பாய்ந்தான் முரடன்.
ஈட்டி முனை பார்த்திபன் கழுத்தில் தாக்கி மின்சாரம் பாய, கத்தினான் பார்த்திபன்.
கழுத்திலிருந்த கன்ட்ரோல் சிப் பொசுங்கி கீழே விழுந்தது.
கழுத்தில் தீக்காயம்.

வலியுடன் சரிந்திருந்த பார்த்திபன் தலையை நிமிர்த்தி பார்த்தான்.
அந்த முரடனும் பார்த்திபனும் ஒருவரையொருவர் நோக்கி சிரித்தனர்.
கை கொடுத்து வீழ்ந்திருந்த பார்த்திபனை தூக்கி நிறுத்திய முரடன்,
என் பேரு மாறன் என்றான்.

தெரியும் என்றவன் அவன் கையிலிருந்த ஈட்டியை வாங்கி கழுத்தில் வைத்தான்.

இது கொஞ்சம் வலிக்கும்... தாங்கிக்கோ....

ஈட்டியால் மாறனின் கழுத்திலிருந்த கண்ட்ரோல் சிப்பை நீக்கிய பார்த்திபன், தொடர்ந்தான்.

அடுத்து என்ன???

கண்டெய்னர்ல நேவிகேஷன் ஜிபிஎஸ் இருக்கு.
கண்டெய்னர் எரிஞ்சதும் நாம தப்பிச்சதும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களுக்கு தெரிஞ்சுடும்...
அவங்க நம்மள தேடி வரதுக்கு முன்னாடி நாம தீரனோட ரகசிய கூடாரத்துக்கு போயாகனும்...
அங்க போயிட்டா நம்மள யாராலயும் கண்டுபிடிக்க முடியாது...

யாரு அது??? தீரன்??

அவரு தான் இங்க அசுராவை எதிர்த்து நடக்குற ஆயுதப்புரட்சி தலைவர்.
நானும் அவங்கள்ல ஒருத்தனா இருந்தவன் தான்..
5வருஷம் முன்ன அசுராவை கொல்ல
ஒரு திட்டம் போட்டோம்.
எங்க படை ரொம்ப சின்னது... வெறும் 16பேர் தான் இருந்தோம்.. ஆனா தீரனோட கோபமும் புத்தியும் அசுராவோட லட்சக்கணக்கான படைய விட பெருசு..
அதனால தான் யாராலயுமே நுழைய முடியாத அசுராவோட வைலட் டவருக்குள்ள எங்களால நுழைய முடிஞ்சுது..
அன்னிக்கு நான் மட்டும் சொதப்பலனா எல்லாமே சரியா முடிஞ்சுருக்கும்...
நானும் மாட்டிக்கிட்டேன்...
எங்க திட்டமும் அன்னிக்கு தோத்துடுச்சு...

அசுரா தான் க்ளேடி க்ளோன்ஸ் தலைவனா???

இத்தன வருஷம் அந்த கூண்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தவனுக்கு அசுராவை தெரியாதது ஆச்சரியமில்ல...
அசுரா க்ளேடி க்ளோன்ஸ் தலைவனில்ல...
அதுக்கும் மேல....
டைம் க்ளோன்ஸ் இன்க்கோட தலைவன்...
இங்க நடக்குற அடிமைத்தனத்தை அழிக்கனும்னா கிளைகள வெட்ட கூடாது வேரை அறுக்கனும்னு தீரன் அடிக்கடி சொல்லுவாரு..
எங்க பழைய காலகட்டத்துக்கு திரும்புறத விட
இந்த காலகட்டத்தை காப்பாத்தனும் நினைச்சோம்.
நீயும் எங்க கூட சேந்துடு.. உன்ன போல ஒரு புத்திசாலியும் எங்களுக்கு வேணும்...

இல்லல்ல... எனக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்ல... நான் போராளியும் இல்ல... இப்போதைக்கு க்ளேடி க்ளோன்ஸ் கிட்டருந்து தப்பிக்கனும் அப்பறம் என்னோட காலகட்டத்துக்கு போறதுக்கான எக்யூப்மென்ட்ஸ் எனக்கு கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் ஒளிஞ்சுருக்க ஒரு மறைவிடம் அவ்வளவு தான்.. உங்க கிளர்ச்சில என்ன இழுக்காதீங்க...
நீ சொல்ற அந்த மறைவிடத்துக்கு நான் வர வேண்டாம் நினைச்சனா நாம ரெண்டு பேரும் இங்கேயே பிரிஞ்சு அவங்கவங்க பாதைல போயிடலாம்...

நான் தப்பிக்க நீ எனக்கு உதவி பண்ணிருக்க.. உனக்கு நான் நன்றிக்கடன் பட்டுருக்கேன்‌.
நீ எங்க இடத்துக்கு வா... உனக்கு தேவையான உதவிகளை தீரனே பண்ணி தருவாரு... அதுக்கப்பறம் உன் வழி...

இருவரும் கைக்குலுக்கிக் கொண்டனர்...

இங்கிருந்து நீ சொல்ற அந்த இடம் எவ்வளவு தூரம்??? போக எவ்வளவு நேரமாகும்??

க்ளேடி செக்யூரிட்டிகளிடமிருந்து சிதறி கிடந்த ஒரு ரிஸ்ட் கேட்ஜட்டை எடுத்து கையில் மாட்டிய மாறன் கேட்ஜட்டின்
ஒரு பட்டனை அழுத்தினான்.
விரிந்த ஹாலோமேப்பின் ஓரத்தில் இருந்த காம்ப்பஸை திருப்பி நார்த்வெஸ்ட் 336° என்று வலதுக்கையை திசை நோக்கி காட்டி இங்கிருந்து 56 மைல் தூரம் என்றான்.

56 மைல்னா நாம அங்க சேருறதுக்குள்ள அவங்க நம்மள கண்டுபிடிச்சுட்டா?
வேற குறுக்கு வழியேதும் இல்லையா?

இது மட்டும்‌தான் பார்த்திபா ஒரே வழி... இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு..
நாம போற பாதைல ஒரு சுரங்கம் இருக்கு.
ரேடியோஆக்டிவ் மெட்டீரியல்ஸ் தோண்டி எடுக்குற இடம்.
அதை சுத்திட்டு போகனும்னா நமக்கு ரெண்டு‌ நாள் ஆகும். நமக்கு இருக்குற ஒரே வழி அதை பெனிட்ரேட் பண்ணி போறது தான்.
ஆனா அதுக்குள்ள போறதுங்கறது அவ்வளவு சாதாரண விஷயமில்ல..
அது அசுராவோட நேரடி கட்டுப்பாட்டுல இயங்குற தளம்.
டைம் க்ளோன்ஸுக்கு அப்பரம் அவனுக்கு பெரிய வருமானம் தரது அந்த தொழில் தான்.
அதனால அது அவனுக்கு ரெண்டாவது வைலட் டவர் மாதிரி..
அங்க போய் மாட்டினா அதுக்கப்புறம் நமக்கு விமோசனமே கிடையாது.

அமைதியானான் பார்த்திபன்..
கொஞ்சம் யோசித்தான்...

நான் கேக்குற இந்த ரெண்டு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு மாறா...
நாம இதை பெனிட்ரேட் பண்ணி போகலனா க்ளேடி க்ளோன்ஸ் ஆளுங்க கிட்ட மாட்டாம அங்க போக நமக்கு வேற வழி இருக்கா??

இல்ல...

நாம உள்ள போய் மாட்டிக்கிட்டா அங்கிருந்து தப்பிக்க நமக்கு வேற வழி இருக்கா??

இல்ல பார்த்திபா... கண்டிப்பா சாவு தான்..

அப்போ நாம கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகனும்... கடைசி வாய்ப்புங்கற பயமும் ஒரே வாய்ப்புங்கற அச்சுறுத்தலும் கண்டிப்பா நம்மள அங்க மாட்டிக்காம காப்பாத்தும்...
போகலாம்..


பார்த்திபனின் இந்த பேச்சு மாறனுக்கு கொஞ்சம் அசட்டுத்தனமாகவும் ஆர்வக்கோளாறாகவுமே பட்டது.
ஆனால் மாறனுக்கும் வேறு வழியில்லை. இதை அவர்கள் செய்து தான் ஆக வேண்டும்.

தீரனின் மறைவிடம் நோக்கி இருவரும் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தனர்.

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இடம் : கிளேடி க்ளோன்ஸ் கண்டெய்னர் விபத்துக்குள்ளான பகுதி
நேரம் : விபத்து நிகழ்ந்து நான்கு மணி நேரத்திற்கு பிறகு.

எரிந்து அணைந்திருந்த கண்டெய்னர்களின் அருகில் ஆயுதங்கள் தாங்கியபடி, வேட்டை நாய்களோடு நின்றுக் கொண்டிருந்தது ஒரு படை.

கீழே கிடந்த கன்ட்ரோல் சிப்புகளுடன் வந்த அவர்களில் ஒருவன், கேப்டன் ராகவன் என்ற பேட்ஜ் அணிந்த ஒருவனிடம் சொல்கிறான்,

ஒன்பது க்ளோன்ஸ்ல ஆறு க்ளோன்ஸ சப் கண்டெய்னர்ஸ்ல மயங்கிய நிலைல காப்பாத்திருக்கோம்... அவங்கள ரெஸ்க்யூ டீம் நம்மளோட ஜி.சி மெடிகோல சேத்து ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டுருக்காங்க...
ரிமைனிங் க்ளோன்ஸ் காணாம போயிருக்காங்க..
அவங்களோட கன்ட்ரோல் சிப்ஸ் டிஸ்மான்ட்டில் செய்யப்பட்டுருக்கு என்று கையிலிருந்த பொசுங்கிய சிப்ஸை காட்டினான்.

கையில் ஒரு மின்திரையோடு வந்த
இரண்டாவது சோல்ஜர் பார்த்திபனும் மாறனும் சண்டையிட்டபடி மலையிலிருந்து கீழே விழும் காட்சியை காட்டினான்..
இது கண்டெய்னர்ல இருந்த கேமரா சர்...
கண்டெய்னர ரெண்டு பேரும் சேந்து தான்
கவிழ்த்திருக்காங்க... சண்டைல நம்ம சொக்யூரிட்டிஸ் 9 பேரு தீயில கருகி செத்துருக்காங்க...

ராகவன் முன் வந்த மற்றொருவன் சல்யூட் வைத்துவிட்டு,
நம்ம செக்யூரிட்டிகள்ல ஒருத்தரோட ரிஸ்ட் கேட்ஜட்டை யாரோ ஆக்டிவேட் பண்ணிருக்காங்க சர்.
Band ID. 57WWJK
அதோட நேவிகேஷன் சிஸ்டம் இன்னும்‌ ஆக்டிவேஷன்ல தான் இருக்கு.
அது டெஸ்டிநேஷன் காட்டும்னு தெரிஞ்சவங்களுக்கு கரண்ட் ஜிபிஎஸும் காட்டும்னு தெரியாம இருந்துருக்கனும் சர்.
சவுத்வெஸ்ட்ல 20 கிலோமீட்டர் தூரத்துல தான் சர் ட்ராவல் ஆகிட்டு இருக்கு.


நான்காவதானவன் மற்றொரு மின்திரையோடு குறுக்கிட்டான்.
சர்... இது கண்டெய்னர் ஆக்ஸிடன்ட் ஆனப்போ காட்டுக்கு மேல பறந்துட்டுருந்த ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டோட சர்வைலன்ஸ் ட்ரோன் தெர்மல் வீடியோ.. இதை பாத்தா ரெண்டு பேரும் ஒன்னா நின்னு பேசிட்டுருக்கற போல இருக்கு... ட்ரோன் பறந்தது west 270° to east 90... அதனால கிடைச்சது இவ்வளவு டேட்டா மட்டும் தான்..
ஏன் அவங்களே ப்ளான் பண்ணி கண்டெய்னர கவுத்துருக்க கூடாது?



அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ராகவன் எரிந்திருந்து கன்ட்ரோல் சிப்பை கையிலெடுத்து பார்த்தபடி சத்தமிட்டு அழைத்தான்.
அரவிந்த்.......

எஸ் சர்... என்று ஒரு இளைஞன் வந்து நின்றான்.

உடனே ஹெட்க்வாட்டஸுக்கு இன்ஃபாம் பண்ணு..
இனிமே க்ளேடி க்ளோன்ஸுக்கு காவலா போற‌ செக்யூரிட்டிஸுக்கு செகண்ட்‌ லெவல் சோல்ஜர் பொசிஷன்ஸ் தர சொல்லுங்க...‌ அவங்களோட ஆயுதங்கள ஆன்-ஸ்பாட் கிள்ளிங் லெவலுக்கு இம்ப்ரூவ் பண்ண சொல்லுங்க...
க்ளோன் கன்ட்ரோல் சிப்ஸோட ஃபீச்சர்ஸ டி5லருந்து ஜி5க்கு இம்ப்ரூவ் பண்ண சொல்லு...
என்ன செய்வாங்களோ, R&D இன்னும் ஒரு மணி நேரத்துல இதுக்கு பர்மெனன்ட் சொல்யூஷனோட ரெஸ்பான்ஸ் பண்ணனும். இன்னும் பண்ணென்டு மணிநேரத்துல நியூலி டெவலப்டு சிப்ஸ் எல்லா க்ளோன்ஸ் கழுத்துலயும் இம்ப்ளிமென்ட் பண்ணிருக்கனும்.

எஸ் சர்... என்று நகர்ந்தான் அரவிந்த்.

விக்னேஷ் என்று இன்னொருவனை அழைத்தான்.

அந்த நேவிகேஷன ஃபாலோ பண்ணுங்க...
அவங்களோ டெஸ்டினேஷன்ஸ்ல அவங்களுக்கு முன்ன‌ நம்ம ஆட்களை அலர்ட் பண்ணுங்க...
எந்த ட்ரான்ஸ்போர்ட் வேணுமோ‌ யூஸ் பண்ணிக்கோங்க.. இன்னும் ஒரு மணிநேரத்துல காணாம போன‌ க்ளோன் நாய்ங்க இங்க இருக்கனும்..
இன்னும் ஒரே ஒரு மணிநேரத்துல...

ஒரு குழு ஐந்து ஹெலிகாப்டர்களில் ஆயுதங்களோடு உயர பறக்க, மற்றொரு குழு வேட்டை நாய்களோடும் ஆயுதங்களோடும் காட்டுக்குள் பாய்ந்தது.


-@RajiTalks