Wednesday, February 28, 2018

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு - தமிழறிவியல்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தௌஸண்ட் வாட்ஸு பவரு...

இந்த பாடலில் சொல்லப்பட்ட கருப்பின் எல்லா சிறப்புகளையும் தாண்டி பாடலாசிரியர் மிச்சம் வைத்த சொச்ச சிறப்புகளும் சில உண்டு.

அமானுஷ்யம்-ஆன்மிகம்,
அச்சம்-வீரம்,
அதிருப்தி-ஆதரவு,
அமைதி-ஆரவாரம்,
கோபம், புரட்சி, எதிர்ப்பு என கிட்டதட்ட எல்லா உணர்வுகளையுமே ஒருசேர பிரபலிக்கும் குறியீடான
கருப்பு எப்போதும் நம் தமிழ் சமூகத்திற்கு நெருக்கமான ஒரு நிறமாகவே இருந்திருக்கிறது.
பழந்தமிழர் வழிபாடுகளின் பெரும்பாண்மை தெய்வங்கள் கருப்பிற்கும் இருட்டிற்கும் விருப்பத்திற்குரிய தெய்வங்களாக இருந்திருக்கிறது என்பதை கருப்பையா கருப்பண்ணன் பெரியகருப்பு என அவை ஏந்தி நிற்கும் பெயர்களுலேயே அறியலாம்.

கருப்பு நிறம் சாதிய அடுக்குகளின் கீழ் தாழ்த்தப்பட்ட நிறமாக அறியப்பட்டது அல்லது வழங்கப்பட்டது பெருதெய்வ வழிபாடு இடைநிலை சாதியர் கை சேர்ந்த சமயம்.
இதன் பின்னரே கருப்பு நிறம் தாழ்த்தப்பட்டோருக்கான நிறமாக
தாழ்த்தப்பட்ட நிறமாக வழங்கப்பட்டிருக்குறது.
இதன் வரலாற்று  மீட்டெடுப்பு நீட்சி முயற்சியானது வெகு சமீப காலத்தில் தொடங்கப்பட்ட திராவிட இயக்கங்களினால்
முன்னெடுக்கப்பட்டவையே.
இப்போதும் கருப்பு என பெயரை கொண்டிருப்பது, கையில் கருப்பு கயிறு கட்டுவது என்பதெல்லாம் பள்ளி குழந்தைகள் வரை நுட்பமாக கவனிக்கும் சாதியறிதல் தொழில்நுட்பத்தின் ஒரு பெரு விஞ்ஞான கண்டுபிடிப்பாகவே இருந்து வருகிறது.

கருப்பு நிறத்திற்கு பின்னால் உள்ள உளவியலானது மத & மத வழி சாதிய அரசியல் தொடர்புடையது..
கருப்பு நிறம் பெண்களை கவரும் ஆண்களுக்கான தேக நிறமாகவும்,
பால் நிறம் ஆண்களை கவரும் பெண்களின் தேக நிறமாகவும் பார்க்கப்படுவது இயல்பாகிப்போனது.
அடி உன் போல செவப்பு இல்ல, கனுக்கால் கால் கூட கருப்பு இல்ல என்று மனிஷா கொய்ராலாவை வர்ணித்து பாடுகிறார் கவிஞர் வைரமுத்து.

இதன் பின்னரசியலானது பொதிகை சேனலில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட ராம நாடகம் தொடர்ந்தே செயல்பட்டு வந்தது.
கருநிற நாயகன் ராமன் கிருஷ்ணன் முருகன் என யாருமே பின் வந்த எந்த தொலைகாட்சி தொடரிலும் ஒரு கருப்பனாக காட்சிப்படுத்தப்படவில்லை.

இந்த மோகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இன்னொரு கடத்தியானது டிவி விளம்பரங்கள்.
உலகமயமாதலில் ஆளுமைகளின் மிகப்பெரிய மார்கெட்டான இந்தியாவில் டிவிக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட அல்லது சந்தைமயமாக்கபட்ட எந்த பொருளும் டிவிக்கு பின்னரே இங்கு விற்பனைக்கு வர காரணம்,
அவற்றை விற்க முதலில் டிவியை வீடுதோறும் குறைந்தபட்சம் தெருக்கள்தோறுமாவது கொண்டு சேர்க்க வேண்டியதானது.
அதன் பின் ஷாம்பு ஃபேர்னஸ் க்ரீம்ஸ் முதல்  சோஃபா கார் வரை அவை எப்படி கருப்பை முன்னிறுத்தி விற்கப்பட்டவை என நாம் அறிந்ததே.

இந்த கருப்பு நிற மோகமானது பின்னொரு காலகட்டத்தில் ரஜினிகாந்த் எனும் நடிகனால் உடைத்தெறியப்படுகிறது.
திறமையிலும் அழகிலும் தன்னை விட பல படிகள் மேல் நின்ற கமலை வீழ்த்த தன் ஸ்டைலை தாண்டி ரஜினியுடன் உடன் நின்ற கரிஷ்மாவானதை நான் கருப்பு என்றே மொழிப்பெயர்க்க விரும்புகிறேன்.
கலரான கமலை விட கருப்பான தன் சொந்தக்காரன் பக்கத்துவீட்டுக்காரன் தோற்றம் ரஜினியை திரையில் பெரிய வெற்றிபெற செய்தது.
அதன் பின் விஜயகாந்த் முதல் விமல் வரை திரையில் ஜெயித்த கதையை நாம் அறிவோம்.

ஒருவரை கிண்டல் செய்யவோ அடையாளம் காட்டவோ ஊர்களில் அட்டகருப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம்.
அட்டை அத்தனை கருப்பு.
உடலில் ஒட்டிக்கொள்ளும் அட்டையின் மேல்,
வெப்பத்தை காட்டுவதன் மூலம் அதை உடலிலிருந்து தனியே பிரித்து எடுத்துவிடலாம்.
இங்கே மட்டுமல்ல எங்கேயுமே கருப்பு வெப்பத்தையும் ஒளியையும் அதிகம் கிரகித்துக்கொள்ளக்கூடிய உள்வாங்கிக்கொள்ளக்கூடிய நிறமாகவே உள்ளது.

கருப்பு சட்டை வெள்ளை சட்டையை விட அதிகம் நம்மை வியர்க்கவும் சோர்வடையவும் செய்வதை உணர்ந்திருக்கிறோம்.
அதனாலேயே டென்னிஸ் வீரர்கள் கிரிக்கெட் வீரர்கள் வெள்ளை உடையணிந்து வெயிலில் விளையாடுகின்றனர்.

இதற்கு காரணம் பொருட்கள் & நிறங்களுக்கிடையேயான இயற்பியல் குணங்கள்.
அவற்றில் மிக முக்கியமானது Emissivity.
சிதம்பரத்தை அடுத்த சீர்காழியை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தை வளர்ப்பில் ஒரு பிரத்தியேக முறையை அம்மக்கள் கையாள்வதை காணலாம்.
அவர்கள் தம் பிள்றைகளை ராஜி போல ஒழுக்கமா இரு,
ராஜி போல வருமா என சொல்லியே வளர்க்கின்றனர்.
அதாவது தொடர்புடைய ஒன்றில் தம்மை சுற்றியுள்ளவற்றிலேயே சிறப்பான ஒன்றை Constantஆக வைத்துக்கொண்டு
பிற இயல்பானவற்றை அதோட compare செய்து அதன் மதிப்பை சொல்வது.
கருப்பு என்பது நிறங்களுக்கான பொருட்களுக்கான ஒரு Comparitive constant.
இதனை இயற்பியல் Black body என்கிறது.

அதாவது கருப்பு நிறம் மற்ற நிறங்களை விட அதிகமாக வெப்பத்தையும் ஒளியையும் உள்வாங்கிக்கொள்கிறது.
இதனை 100% obsorption என Assume செய்துக்கொள்ளலாம்.
குறைவாக வெப்பம் & ஒளியை உள்வாங்கும் நிறங்களை இந்த கருப்போடு ஒப்பிட்டு அதன் obsorption valueவை சொல்வதையே Emissivity என்கிறோம்.

எடுத்துக்காட்டாக ஒரு அலுமினியத்தகடு கருப்பை விட வெறும் 3%சதவீதம் மட்டுமே வெப்பத்தை உள்வாங்கிக்கொள்கிறது.
ஆக
Emissivity of Al = (heat obsorbed by Al) % (heat obsorbed by black) = 3/100 = 0.03
ஆகவே இஞ்சின் & Thermal plantகள் மாதிரியான வெப்பமயமான இடங்களில் அலுமினியம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு நிறம் மற்ற நிறங்களை விட அதிகம் வெப்பம் & ஒளியை உள்வாங்கிக்கொள்கிறதே தவிர 100% முழுவதும் உள்வாங்கிக்கொள்கிறதா என்றால் இல்லை.
100% கருப்பான ஒரு கருப்பால் மட்டுமே 100% ஒளியை வெப்பத்தை உள்வாங்க முடியும்.

அப்படி 100% ஒளியை உள்வாங்கிக்கொள்ளும் இயற்கையான கருப்பு எது தெரியுமா??

அது இந்த உலகிலேயே இல்லை.

100% கருப்பை பற்றி புரிந்துக்கொள்ள முதலில் நாம் ஒரு பொருளை எப்படி காண்கிறோம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு சின்னதாக ஒரு thought experiment செய்து பார்க்கலாம்.

Experiment_1
சிறிதும் ஒளியில்லாத ஒரு இருட்டை அறையில் நீங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறீகள்.
உங்கள் கையில் ஒரு டார்ச் லைட் உள்ளது.
சுவர்களின் நிறம் வெள்ளை.
அதை ஒரு சுவரின் அடிக்க, அந்த ஒளி சுவற்றில் பட்டு எதிரொளித்து உங்கள் பார்வையில் படுகிறது.
கண் அந்த எதிரொளியை கிரகித்து சுவற்றில் உள்ளவற்றை விழித்திரை மூலம் மூளைக்கு புரிய வைக்கிறது.
இந்த சுவர் காட்சி நம் கண்களுக்கு புலப்படுவது டார்ச்லைட் மூலம் செலுத்தப்பட்ட ஒளி சுவற்றினால் பிரதிபலிக்கப்படுவதால் மட்டுமே.

Experiment_2
இப்போது அதே இருட்டு அறையின் சுவர்களின் நிறம் கருப்பு.
அதே டார்ச்சை அந்த சுவரில் அடிக்க கிட்டதட்ட வெள்ளை சுவற்றில் கண்ட அதே காட்சி தான் இப்போதும் விழிகளில் தெரியும்.
கருப்பால் 100% ஒளியை உமிழ்ந்துக்கொள்ள முடிந்திருந்தால்
நீங்கள் டார்ச்சில் அடித்த மொத்த ஒளியும் சுவற்றால் உமிழப்பட்டு எதிரொளித்து விழிக்கு சேர எந்த ஒளியுமின்றி
வெளிச்சமின்றி அதே இருள் தான் அங்கே இருந்திருக்கும்.
எதுவுமே தெரிந்திருக்காது.
இதனால் தெரிவது பூமியில் உள்ள எந்த இயற்கை பொருளுமே 100% கருப்பால் ஆனது கிடையாது.

அப்போ அந்த 100% இயற்கை கருப்பு எதுனு தான கேக்குறீங்க?

நாம் அனைவருமே கேள்விப்பட்ட கருந்துளை(Black hole) தான் அது.
கருந்துளை உண்மையாகவே கருப்பாக இருக்குமா என்றால் இல்லை அது invisible.
தன்னை சுற்றியுள்ள எல்லாவற்றையும் தன்னுள் இழுத்துக்கொள்ளும் கருந்துளை ஒளியை கூட விட்டுவைப்பாதாயில்லை.
அதையும் 100க்கு 100 தனக்குள் இழுத்துக்கொள்கிறது.
கருந்துளை பற்றி நம்மில் பலருக்கும் விரிவாகவே தெரியுமென்பதால் துளையை விட்டுவிட்டு நம் கருப்புக்கே மீண்டும் செல்வோம்.

உலகில் இயற்கையான கருப்பு தான் எதுவுமில்லையே தவிர
செயற்கையான 100% கருப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முயற்சித்து Nano technology மூலம் அதில் கொஞ்சம் வெற்றியும் கண்டிருக்கின்றனர்.

அது தான் VANTA BLACK.
அதாவது Vertically Aligned Corbon Nano Tube Array.

மனித முடியை விட 10000மடங்கு சிறிய கார்பன் நானோ குழாய்கள் வரிசையாக ஒரு fabric போல் அடுக்கப்பட்டு
அந்த arrayயானது ஒரு சிலிண்டராக்கப்படுகிறது.
அந்த fabricன் மேல் இருக்கும் corban nano tubeகள் மிக துல்லியமான photonகளை கூட உள்ளே அனுமதிப்பதில்லை.
அதாவது பள்ளிகளில் உள்ள ஒரு கரும்பலகை 5-7% வரை ஒளியை உள்வாங்கிக்கொள்கிறது என்றால்
இந்த VANTA BLACK 99.98% ஒளியை தனக்குள் உள்வாக்கிக்கொள்கிறது.
Nearly a manmade blackHole.
இப்போது இந்த vanta black சுவற்றில் மேலே செய்த அந்த டார்ச்லைட் experimentஐ செய்வோமானால் முன்னவே சொன்னது போல் நமக்கு எதுவுமே பிரதிபலிக்க இல்லாமல் ஒரு இருட்டு மட்டுமே தெரியும்.

சாதாரண கருப்பு நிறத்தால் பெய்ண்ட் செய்யப்பட்ட ஒரு முகமூடியையும்
Vanta blackல் பெய்ண்ட் செய்யப்பட்ட ஒரு முகமூடியையும் கீழுள்ள படத்தில் காணலாம்.


இந்த vanta blackஐ ஒரு டென்னில் பந்தில் பெய்ண்ட் செய்வதாக வைத்துக்கொள்வோம்.
ஒரு பந்து நமக்கு வட்டமாக(round) தெரியாமல்
கோளமாக (Sphere) தெரிய காரணம்,
அந்த பந்தில் பிரதிபலிக்கும் ஒளி அந்த பந்தின் வலைவுகளை(curvature) பிரித்து தனியாக காட்டுவதால் மட்டுமே.
அந்த பந்தில் Vanta blackனால் பெய்ண்ட் செய்வோமானால் பந்தின் வலைவுகளில் படும் ஒளி உமிழப்பட்டு அந்த கோளமானது வட்டமாகவே தெரியும்.
அதாவது இப்போது நாம் காணும் எந்த 3D பொருளிலும் இந்த vanta blackஐ பெய்ண்ட் செய்வோமானால் அது நம் கண்களுக்கு 2D outline உருவமாக மட்டுமே தெரியும்.
மட்டுமின்றி இந்த கருப்பு 750-900°c வெப்பம் வரை தனக்குள் உள்வாங்கிக்கொள்கிறது.

டெலஸ்கோப்களில் பயன்படுத்தப்படும் vanta black,
ஒளியின் அலைநீளத்தை கட்டுப்படுத்தி மிக துல்லியமான வாண்காட்சியை காண உதவும்.
இதன் பங்கு பயன்பாடுகளுக்கு வரும் பட்சத்தில் சூப்பர்பவர் 2D கருப்பு கார்கள், மைதானத்தை மட்டுமே கூர்ந்து நோக்க உதவும் கருப்பு விளையாட்டு ஸ்டேடியம்கள்,
கண்களுக்கு புலப்படாத நீர்மூழ்கி போர் கப்பல்கள், விமானங்கள், 2D ஆடைகள் என உலகமே வேறு டைமன்ஷனில் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதன் முன்னோட்டமாக வரவிருக்கும் Winter olymbics 2018ல் vanta black தொடர்பான ஒரு நிகழ்ச்சியையும் செய்துகாட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்.
மட்டுமின்றி இந்த vanta blackஐ டெவலப் செய்த Surray nanosytem நிறுவனம் இதன் அடுத்த வெர்ஷனான Vanta black2வை வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்த இருக்கிறது..
அது தற்போது உள்ள vanta blackஐ விட இன்னும் அதிக ஒளியை அதாவது 99.999% ஒளி வரை வெளியே தப்ப விடாதபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.

posted from Bloggeroid