Wednesday, May 11, 2016

TIME TRAVEL எனக்கு புதுசு.!!

தமிழ்சினிமாவின் முதல் காலப்பயண திரைப்படம் என்பதால் இப்படியொரு பதிவை இன்று நேற்று நாளை படம் வெளிவந்த போதே எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன்!

பொதுவாகவே காலப்பயணம் என்பது மிக சுவாரஸ்யமான அதே சமயம் கொஞ்சம் சிக்கலான ஒரு விஷயம்!
ஹாலிவுட்டை பொறுத்தவரை அது Matured Sci-fi film making என்ற லெவலுக்கு சென்றுவிட்டது.
அதை ஃபேன்டசியாக கையெலெடுப்பதை விட Science fictionனாக எடுத்து திரைக்கதையை குழப்பமின்றி மக்களிடத்தில் சேர்ப்பதென்பது கடினமான ஒரு விஷயம்!

அதையும் தாண்டி நேர்த்தி பணமுதலீடு VFX கலை சுவாரஸ்யம் என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது!

ஒரு காலப்பயண கதையென்பது (இப்போது தான் நாம் எக்ஸ்பெரிமெண்ட்டலாக தொடங்கியிருக்கிறோம் என்பதால்) அதிகபட்சம் ஐன்ஸ்டைனின் General & special relativity theoryக்களோடு ஒத்துப்போவதாக இருக்க வேண்டுமென்பதை தாண்டி,
குறைந்தபட்சம் Basic philosophical time travel theoriesஓடாவது ஒத்துப்போக வேண்டும்!

உண்மையில் அவற்றை கருத்தில் கொண்டு யோசித்தால் மட்டுமே சிக்கலின்றி ஒரு சிறந்த திரைக்கதைக்குள் டைம் மிஷினை கொண்டு வர முடியும்!

முதல் விதி (அ) தியரி Fixed timeline time travel.
அதாவது ஒருவன் டைம் மிஷினால் பின்னோக்கி செல்ல முடியும் நடப்பவற்றை காண முடியும்.
ஆனால் வரலாற்றில் எதையும் அவனால் மாற்ற முடியாது.
இந்த விதியின் படி இங்கே நேரமும் காட்சிகளும் (Time and sequence) ஒன்றாக பிண்ணியிருக்கின்றன.

For eg : ஹிட்லர் இல்லையேல் இரண்டாம் உலகப்போர் நடந்திருக்காது ஆகையால் நான் சில வருடங்கள் பின்னோக்கி சென்று ஹிட்லர் குழந்தையாக மருத்துவமனையில் இருக்கும்போது அவருக்கு பதில் அங்கே வேறொரு குழந்தையை மாற்றி வைக்கிறேனென வைத்துக்கொள்வோம்,
கால&காட்சி பிண்ணலின் படி மாற்றி வைக்கப்பட்ட குழந்தையானது ஹிட்லராக வளரும், அக்குழந்தையே ஹிட்லராக இரண்டாம் உலகப்போரையும் நடத்தும்.
இரு பெர்ஸ்னாலிட்டிகள் இடம் மாறினாலும்
இங்கே உலகப்போரானது தவிர்க்க முடியாததாகிறது.
எல்லாம் விதிப்படி நடக்கும் என சொல்வோமே கிட்டதட்ட அது தான் இந்த தியரி.

இரண்டாவது தியரி Dynamic timeline.
இந்த தியரி படி நீங்கள் கடந்த காலத்தில் மாற்றும் ஒவ்வொரு விஷயமும் அதன் பாதிப்பை நிகழ்காலத்திலும் ஏற்படுத்தும்.
இது Grandfather paradox.

For eg : (0) நீங்கள் கடந்த காலத்திற்கு சென்று உங்கள் தாத்தாவை குழந்தைப் பருவத்திலேயே கொன்றுவிடுவதாக வைத்துக்கொள்வோம்.
(1) அதன்படி உங்கள் தந்தையின் பிறப்பும் உங்கள் பிறப்பும் ரத்தாகிறது.
(2) அதாவது எதிர்காலத்தில் நீங்கள் பிறந்திருக்க மாட்டீர்கள்
(3) அப்படியென்றால் நீங்கள் டைம் ட்ராவல் செய்திருக்க முடியாது
(4) உங்கள் தாத்தாவையும் கொன்றிருக்க முடியாது
(5) உங்கள் தாத்தா சாகவில்லையெனில் நீங்கள் பிறந்திப்பீர்கள்
(6) திரும்பவும் காலத்தை கடந்து உங்கள் தாத்தாவை கொல்ல செல்வீர்கள்.
கொஞ்சம் குழப்பமாயிருக்கிறதல்லவா!!
0,1,2,3,4,5,6,0,1,2,3,4,5,6,0,1,2.............
ஆக இது ஒரு Continues Loopஆக நடந்துக்கொண்டே இருக்கும்.
இதுவே Paradox.
விதியை மதியால் வெல்லலாம் என சொல்வோமே அது இந்த தியரி.

Philosophical theoryக்களில்  குழப்பமூட்டும் மற்றோரு தியரி Fermi paradox.
இவை முழுவதும் Possibility, probabilityயை சாந்தவை.
இதை விளக்கப்போனால் Galaxy, universe, God damn particles, boson, existance of god என பெரிதாய் நீளுமென்பதால் இதை இங்கே தவிர்க்கிறேன்.
(இதன் சிறு பிரிவு மட்டும் blogல் ஒரு குட்டி கதையாக மனுநீதி என்ற பெயரில் உள்ளது)

மூன்றாவது தியரி Relative timeline or Multiverse.

இந்த தியரியை பொறுத்தவரை Gravityயையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.
ஐன்ஸ்டைன் Relativity theory படி
Time & spaceக்கும் Time & gravityக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
நேரத்தின் சீக்வன்ஸானது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு நொடிக்கும்
ஒவ்வொரு micro, nono secondக்கும்
வேறுபடும்.

இந்த நொடியில் நான் நிகழ்காலத்தில் இருக்கிறேன்.
அடுத்த நொடியில் நான் நிகழ்காலத்தில் இருக்கும்போது கடந்த நொடி இறந்தகாலமாகிறது.
அதேபோல் இந்த Nano நொடியில் நான் நிகழ்காலத்தில் இருக்கிறேன்.
அடுத்த நானோ நொடியில் நான் நிகழ்காலத்தில் இருக்கும்போது கடந்த நானோ நொடி இறந்தகாலமாகிறது.
பூமியின் காலம் நம்மோடே நகர்கிறது.

இதன்படி ஒவ்வொரு நானோ நொடிக்கும் ஒவ்வொரு காட்சி சீக்வன்ஸ் (அ) டைம்லைன் நடப்பு டைம்லைனுக்கு நிகராக ஓடிகொண்டிருக்கும்.

For eg : டைம் ட்ராவல் செய்து 1மணி நேரத்திற்கு முன்பு சென்று, உங்கள் தாத்தாவை நீங்கள் கொண்றுவிட்டால் அந்த Sequence (அ) டைம்லைனில் மட்டும் உங்கள் தாத்தா இறந்திருப்பார்.
நடப்பு டைம்லைனுக்கு திரும்பி வந்து பார்த்தால் உங்கள் தாத்தா உயிரோடு தான் இருப்பார்.
இங்கே உங்கள் தாத்தா இல்லாத ஒரு டைம்லைனை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் அவ்வளவே!
நீங்கள் கொலை செய்வதற்காக கடந்து செல்லும் அந்த கடந்த கால டைம்லைனில் உங்கள் தாத்தா ஏற்கனவே இறந்தும் கூட போயிருக்கலாம்!
அட கொல்ல சென்ற நீங்களே கூட அந்த டைம்லைனில் ஏற்கனவே இறந்திருக்கலாம்.
இதுவே Parallel world (அ) parallel timeline.
(12b படத்தின் கதை இது தான்)

ஐன்ஸ்டைனின் Twin paradox (அ) Redshift timeline என்பது காலப் பயணத்தின் மற்றொரு அங்கம்.
இதை Time dilation என சுலபமாக விளக்கி விடலாம்.
According to the Velocity and gravitational time dilation theory, ஒரு கலன் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் இரு velocity (அ) gravityக்கு இடையே பயணிப்பது.
அப்படி பயணிக்கயில்
பூமியில் இருக்கும் Twin சகோதரனை விட கலனுள் பயணித்த மனிதனுக்கு குறைவாகவே வயதாகியிருக்கும்.
அதாவது கலனில் பயணித்தவன் குறைந்த நேரத்தில்(கலனின் வேகம் & நேரத்தின் படி) அதிக காலத்தை(பூமியின் சுழற்சி & நேரத்தின் படி) கடந்திருப்பான்.

(இதையே சமீபத்தில் Nolan's Intersteller படத்தில் காட்டியிருப்பார்கள்)

மற்றும் இது எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கு மட்டுமே சாத்தியப்படும் ஒரு நிகழ்வு, கடந்த காலத்திற்கு செல்வது சாத்தியமற்றது.
இதன் அதிகபட்ச சாத்தியக்கூறாக உலக விஞ்ஞானிகள் எட்டியிருப்பது GPSன் பயன்பாட்டை தான்.
20000-22000கி.மீ பூமியிலிருந்து தொலைவிலிருக்கும் orbital clock பூமியை விட 4மடங்கு குறைவான gravityயை உணர்கிறது.
According to the einstein's gravity curves of space and time, Orbital clock ஒரு நாளுக்கு 45மைக்ரோ நொடிகள் (எக்ஸ்ப்ரிமெண்ட்டலி 38மைக்ரோ நொடிகள்) adavanceஸாக இருக்கிறது.
இதை இன்னும் ப்ரிசைஸ் ஆக்கும் முயற்சியில் தான் இப்போது நாசா இறங்கியுள்ளது.

Basic Sci-Fi philosophyகளாக டைம் மிஷினை
Object travel மற்றும் Data transfer என இரண்டு Phaseகளாக பிரிக்கலாம்.
இவ்விரண்டு டைம் மிஷின்களும் எந்த அடிப்படையில் செயல்பட்டாலுமே
அந்த மிஷின் பயணிக்க ஒரு மீடியம் தேவை.

அது ஐன்ஸ்டைனுடைய WormHole or Einstein-Rosen bridgeஆக இருக்கலாம்.
அல்லது WormHoleன் உதவியால் காலத்தை கடக்கும் எந்த கலனும் டைம் மிஷின் எனப்படும்.
உண்மையில் WormHole எனப்படுவது காலத்தை கடக்கும் ஒரு மீடியம் அல்ல.
அது விண்வெளி பயணத்தின் போது கோடிக்கணக்காக ஒளி தூரங்களை குறைந்த நேரத்தில் கடக்க உதவும் ஒரு 4th dimension சாரம்சம்(Space time).
அதன் செயல்பாட்டு காலத்தோய்வு காரணமாக, அதுவும் ஒரு மீடியமாக கருதப்படுகிறது.
Wormhole(கருந்துளை) எனப்படுவது நேர் குழாய் மாதிரியான உட்கட்டமைப்பு கொண்ட ஒரு கோள வடிவ பொருள்.
இரு முனைகளின்
ஈர்ப்புவிசை உராய்வு காரணமாக (Gravity என்பது timeக்கு ஏற்றார்போல் வளைந்துக்கொடுக்க கூடியது என்பதால்) ஒரு முனையில் புகுந்தால் மறுமுனை வழியாக பல கோடிக்கணக்கான ஒளியாண்டுகள் தூரத்தை நொடிகளில் கடந்து விட முடியும்.

For.eg : ஒரு சம பக்க முக்கோணத்தை நேர்கோடாக
A___B___C___D என விரிக்கலாம்.
இதில் Aவிலிருந்து Dக்கு செல்ல 1மணிநேரம் ஆவதாக வைத்துக்கொள்வோம்.
இதையே ஒரு முக்கோணமாக Aவையும் Dயையும் ஒரு புள்ளியில் மடித்தால்,

      A,D
      /\
    /    \
B/ __ _\C

Aவிலிருந்து Dக்கு நொடிப் பொழுதில் சென்றுவிடலாம்.
இதையே Gravity Timeமிற்காக வளைந்து கொடுப்பதாக கூறினோம்.
இந்த மீடியமே WormHole or Rosen Bridge எனப்படுகிறது.

இதன் செயல் வாய்ப்பானது ஐன்ஸ்டைன் விதிகளின் படியே மிகக்குறைவு.
தியரிபடி இதன் உருவ அளவானது ஒரு குண்டூசி கூட பயணிக்க முடியாதளவு 10^-33Cm மட்டுமே
மற்றும் Exotic mattersன் குறைபாட்டின் காரணமாக (manually adding of exotic matter is possible என்றாலும் கூட) எளிதில் சிதைந்து விடக் கூடியது.
Exotic matter என்பது கருந்துளையில் ஒரு பொருள் பயணிக்க உதவும் ஒரு உந்துவிசை அல்லது உந்துகோள் என கொள்ளலாம்.
இதன் மேம்பாட்டு செயலாக்கம் பற்றிய ஆராய்ச்சிகள் வெகு காலமாக ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் தலைமையில் நடத்தப்படுகிறது.

மீண்டும் sci-fi Philosophical ideas of TMக்கு வந்தால்,
Object time machine எனப்படுவது ஓரு பொருளை ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு கடத்தக்கூடியது.
இந்த Philosophyயானது fixed & Parallel worldடோடு தொடர்புடையது.
ஒரு மிஷினை பயன்படுத்தி நான் என் இறந்த காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ செல்வேனானால்
ஒரே டைம்லைனில் நான் இரண்டு இடத்தில் இருப்பேன்.
For eg : இன்று நேற்று நாளை பட பாடலில் கதாநாயகி ஒவ்வொரு கால கட்டத்திற்கும் சென்று தன்னை தானே பார்ப்பார்.
மிஷின் Objectஓடு காலத்தை பயணிக்கும்.
பயணம் செய்யும் object நிகழ்காலத்திலும் அதன் எதிர்காலத்திலும் இருக்காது.
இது Fixed timelineனோடு ஒத்துப்போகிறது.

இதையே Parallel timelineனோடு ஒப்பிட்டு பார்த்தால்,
நான் காலப் பயணம் மேற்கொள்வதில் பிரச்சனையில்லை.
ஆனால் நான் நிகழ்காலத்திற்கு திறும்பும்போது,
மேற் சொன்னபடி குறிப்பிட்ட நானோநொடி டைம்லைனிலிருந்து பயணித்த நான் திறும்ப அதே குறிப்பிட்ட மைக்ரோ நானோ நொடிக்குண்டான டைம்லைனுக்கு திறும்ப வேண்டும்.
ஒரு நானோ நொடி முன்னோ பின்னோ சென்றாலும் நான் வேறு டைம்லைனுக்கு சென்று விடுவேன்.

இந்த குழப்பத்தை தவிர்க்க இந்த டைம் மிஷினானது
Return timing automaticக்கானது manual தலையீடு முடியாது என வைத்துக்கொள்ளலாம்.
மிஷின் சரியான நானோ நொடிக்குண்டான டைம்லைனில் புகுந்துவிடும்.

அப்படியானால் நான் கடந்து சென்று மாற்றிய என் டைம்லைன் இப்போது வரலாறாக மாறியிருக்கும்.
ஆனால் நான் எனது வரலாற்றுடனான சரியான டைம்லைனுடைய எதிர்காலத்திற்கு எப்படி செல்வேன்.?!
இச்சித்தார்தத்தின் படி இதன் துல்லியமானது ஒவ்வொரு நானோ நொடிக்கும் வேறுபடும் என்பதால் அது மிகவும் அசாத்தியமான ஒரு விஷயம்.

ஒரு சம்பவத்தை இப்படியாக காட்சிப்படுத்துவோம்.
என்னிடம் ஒரு கடந்த வாரமாக ஒரு டைம் மிஷின் உள்ளது.
இன்று 7ம் தேதி.
அதை எடுத்துக்கொண்டு நான் 6ம் தேதிக்கு செல்கையில் ஒரு விபத்தினால் என் டைம் மிஷின் உடைகிறது நான் நிகழ்காலம் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கிறேன்.
ஆனால் 6ம் தேதியினுடைய டைம்லைனில் என்னிடம் ஒரு டைம் மிஷின் இருக்கும்.
அதைக்கொண்டு நான் 7ம் தேதிக்கு வருவேனானால் 7ம் தேதி ஆகும் வரை 6ம் தேதியின் என்னிடம் டைம் மிஷின் இருக்காது.
இது Paradoxஐ நேரடியாக குழப்புகிறது.

For eg : நாளை காலை நான் குடிக்கும் காபியில் உப்பை கொட்ட எதிர்காலத்திற்கு பயணிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், நான் செல்லும் அந்த தொடர் டைம்லைனில் உப்பு டப்பா காலியாகியிருக்கலாம்.
அதனால் நான் சென்ற நோக்கமானது பாதிப்புக்குள்ளாகலாம்.
அப்படியானால் உப்பு டப்பாவில் உப்பு உள்ளது மாதிரியான ஒரு டைம்லைனை நான் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா!?
கொஞ்சம் குழப்புகிறேன் தான்!!

Terminator போன்ற படங்களில் இந்த Paradoxஐ கையாளவே Security robot தன்  மிஷன் முடிந்ததும் கடைசி காட்சியில் தானாகவே தன்னை மாய்த்துக்கொள்ளும்.

இரண்டாவதானது Memory Transfer or Data transfer.
இதில் டைம் மிஷினானது தன்னோடு தொடர்பிலுள்ள நபருடைய ஞாபங்களை மட்டும் தன்னோடு சேர்த்து ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு கடத்தும்.
இந்த ஞாபகங்கள் கடந்த காலத்திற்கு செல்கையில் பயணத்திற்கு முன் நடந்த முழு வரலாற்றையும்
முன்னோக்கி செல்கையில் தொடர்புடைய இரு காலங்களுடனான ஞாபகங்களையும் கடத்தும்.
இங்கே மிஷினானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டுநரோடு பயணிக்க கூடியது.
ஆனால் மிஷினை பயன்படுத்துபவரால் தான் இறந்துவிட்ட மற்றும் மிஷின் உடைந்துவிட்ட ஒரு எதிர்கால டைம்லைனுக்கு செல்ல முடியாது.
இது பொருளை கடத்தாது என்பதால் இதை Fixed timeline theoryயாக எடுத்துக் கொண்டு Paradox மற்றும் Cyclic loopஐ தவிர்க்கலாம்.
இந்த தத்துவத்துடன் பல காமிக்ஸ்கள் & கார்டூன் சீரியஸ்கள் வந்திருந்தாலும் திரைப்படங்கள் வெகுசிலவென்றே சொல்லலாம்.

For eg : இந்த டைம் மிஷினை ஒரு கைப்பேசியாக வைத்துக்கொள்வோம்.
நீங்கள் காத்துக்கொண்டிருக்கும் 72c பேருந்து, முன் நிறுத்தத்தில் பஞ்சராகியுள்ளது.
இது Fixed timeline படி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
வாய்ப்பில்லையெனில் உங்களால் சரியான நேரத்திற்கு போக வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது.
இது Actual sequence.
இன்னும் கொஞ்ச நேரத்தில் இது உங்கள் வரலாறாகப் போகிறது.
ஆனால் எதிர்காலத்திலிருந்து யாரோ ஒருவர் பேருந்து பஞ்சராகி விட்டது அதனால் உன்னால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாதென்பதால் உன் வேலை பறிபோகும் வாய்ப்புள்ளதாக கைப்பேசியில் கூறினால் பேருந்தை மறந்து விட்டு
ஷேராட்டோ பிடித்து போக வேண்டிய இடத்திற்கு போய் விடுவீர்கள் அல்லவா!?
இது தான் memory transfer.
இங்கே கைப்பேசியிலிருந்து அழைத்து இப்படி ஒரு எச்சரிக்கையை அளித்தது  பேருந்து வராததால் தாமதமாக சென்று வேலையை இழந்த எதிர்காலத்திலிருக்கும் நீங்களே தான்.!
குறிப்பு : தகவல் பெற்று சரியான நேரத்திற்கு சென்று வேலையை தக்க வைத்துக் கொண்ட நான்
டைம் மிஷின் கிடைத்ததும் கடந்த கால எனக்கு பேருந்து பற்றிய தகவலை அனுப்ப வேண்டுமா என கேட்காதீர்கள் இது Fixed timeline.
ஆனால் வேலை கிடைத்து விட்டதால் இது உங்களுக்கு டைம் மிஷின் கிடைக்கும் வாய்ப்பை இழக்க செய்யலாம்.
செய்யாமலும் இருக்கலாம்.
அப்படி இழக்க செய்தால் இந்த sequence, Paradox ஆகிவிடும். இங்கே தான் Fermi paradox வேலை செய்கிறது அதாவது Probability & possibility.
என்னதான் நீங்கள் கடந்த காலத்திற்கு சென்று கதையை மாற்றினாலும் அது probability படி வேறு போக்கிற்கு (தான்) செல்லும் செல்லாமலுமிருக்கலாம்.
இதன் அடுத்து பரிணாமம் தான் செய்திகள் தகவல்களாக அல்லாமல் ஞாபகங்களாக மிஷினை பயன்படுத்துபவரை அடையச் செய்வது.
அதாவது எதிர்காலத்திலிருக்கும் நான்
என் டைம்லைன் பற்றிய வரலாற்றை ஞாபகங்களாக என் இறந்த காலத்திற்கு அனுப்புவது.
இந்த ஞாபகங்களை பெற்ற நான் என் நிகழ்காலத்தில் நான் செய்த தவறுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா!!

இதுவே மாற்றத்திற்கு காரணமான ஒரு டைம் மிஷின் டைம்லைனின் எதிர்காலத்தில் பழுதடைவது கடந்த காலத்தை எந்த வகையிலும் பாதிக்காது.
ஆனால் கடந்த காலத்தில் பழுதடைவதோ உடைந்து விடுவதோ எதிர்கால டைம்லைனில் பாதிப்பை ஏற்படுத்தி Paradoxஐ உருவாக்கும்.

தற்காலத்தில்  நாம் அனுப்பும் எல்லா Dataவும் பரிமாற்றத்தின்போது சரியாக Receiverஐ துல்லியமாக சென்றடைவதில்லை.
ஏகப்பட்ட டேட்டாக்கள் மீடியம்களில் வழி தவறுகிறது அல்லது சிக்கிக்கொள்கிறது.
( Gravity, speed, time உடனான relationshipம் Gps செயல்பாடும் தான் நமக்கு தெரியுமே.!? )
இதன்படி புவியை சுற்றியுள்ள வெவ்வேறு
ஈர்ப்புவிசைகளிலோ பரிணாமத்திலோ எதிர்காலத்திலிருந்து அனுப்பப்பட்ட(யாராவது அனுப்பியிருக்கலாம் என்ற நம்பிக்கையில்) டேடாக்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.
வேற்றுகிரகவாசிகள் குறித்த தேடல்களில் மொழி முரண்களிருந்தாலும் இத்தகைய தகவல் பரிமாற்றமே சாத்தியமென நம்பப்படுகிறது.

ஆக எந்த Time machineம் ஏதோ ஒரு காலப்பயண சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால் போதுமானது.

இந்த ஞாபக காலப் பயணத்தை medical termsல் Tulving's theory எனவோ Chronesthesia எனவோ கூறப்படுகிறது.
இவை SMP, ESP என probabilityகளை பற்றி கூறாமல் எதிர்காலத்தை குறித்த கணிப்புகளின் தொடர்பான மூளையின் திறனாக சொல்லப்படுகிறது.

இதன் மற்றுமொரு அங்கம் Time freezer.
அதாவது காலத்தை உறையச் செய்வது.

காலத்தை உறையச் செய்வது என்பதில் time machineஐ மறந்து Gravity, speed & timeஓடு ஒப்பிட்டுக் கொண்டால் புரிய சுலபமாயிருக்கும்.
For eg : Time dilation.
அதிவேகத்தில் பயணிக்கும் பொருள் நேரத்தை மெதுவாக கடக்கும் என்பதை vice-versaவாக பூமியிலேயே நடப்பதாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பூமியும் அதிலுள்ள மக்களும் கருப்பொருட்களும் உருப்பொருட்களும் 60நிமிடங்களை 60நிமிடங்களில் செலவிடுகிறார்கள்
ஆனால் நான் மட்டும் 60நிடங்களை 1நொடியில் செலவிட்டு விட்டால்,
மற்றோரின் 59.59நொடிகளை நான் உறையச் செய்து விட்டதாக கொள்ளலாமல்லவா!?
இது global gravityயில் மிகமிக துல்லியமாக நடக்கும்போது இதை நேரத்தை உறைய வைப்பதாக கொள்ளலாம்.

எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலாய் போய் மேற்கண்ட அனைத்து தத்துவங்களையும் ஒருயடியாக குழப்பிவிடுவது Butterfly reaction.
இது இப்படி தான் நடக்க வேண்டும் என்பது இயற்கை மறை பொது விதியானால்,
இறந்தகாலத்திற்கு போய் ஒரு துறும்பை நகர்த்தி விட்டாலும் கூட,
திரும்பி நிகழ்காலத்திற்கு வந்து பார்க்கும் போது
குறைந்தபட்சம் personal Paradoxம்
அதிகபட்சம் இறந்த காலத்தின் உலக அழிவுமே கூட ஏற்படலாம்.
இது multiverseல் பிரச்சனையில்லை ஆனால் fixed worldல் மிகப்பெரிய பூதாகரமான பிரச்சைனையாகி விடும்.

இவை தான் குறைந்தபட்ச Science & fantacy philosophy Time travel theoryக்கள்.
ஒரு எழுத்தாளர் திரைக்கதையை அமைக்கையில்
மேற்கண்ட குழப்பங்களை பார்வையாளர்களிடத்தில் இயல்பாக உலவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது அவசியமாகிறது.
பொதுவாக Time travel படங்களை பார்க்கும்போது பார்வையாளர்களை குழப்புவது paradox மட்டுமே.
மற்றபடி parallel timeline பற்றி பெருவாரியானோர் யோசிப்பதில்லை.

அந்த வகையில் இன்று நேற்று நாளையும் சரி 24ம் சரி பார்வையாளர்களை paradox & continues loopகளால் குழப்பாமல் திரைக்கதையை புத்திசாலித்தனமாக அமைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

மட்டுமின்றி கால இயந்திரத்தின்  செயலாக்கம் மாதிரியான குறைந்தபட்ச அறிவியல் காரணங்களை விளக்க வேண்டிய அவசியமுமுள்ளது!
தெரியாத நபரிடமிருந்து நடுராத்திரியில் வரும் கைப்பேசி அழைப்பில் நம்மை பயமுறுத்தும் அமானுஷ்ய குறிப்புகள் பகிரப்படுகிறதெனில் அதை Horror என்று சொல்வோமே தவிர Sci-fi என்றோ Fantacy என்றோ அல்ல.
அந்த வகையில் குறைந்தபட்சம் கால இயந்திரத்தில் செயல் காரணிகளை விவரிக்கவில்லையென்றாலோ
(முன்னதே சொன்னது போல் நாம் Experimentally முயற்சிக்கிறோம் என்றாலும், பார்வையாளர்களிடத்தில் திணிக்கப்படும் அதிக அறிவியல் குழப்பங்களை தவிர்க்க தான் என்றாலும் கூட செயலாக்க விரிவுரை குறைந்தபட்சம் அவசியமுள்ளது)
அல்லது தவறாக சித்தரித்தாலோ
(ஒரு மயிலறகால் என் முகத்தில் வருடினால் நான் எதிர்காலத்திற்கு சென்று விடுவேன் என கூறுவது ஏற்க தக்கதல்ல அல்லவா!?)
காலப்பயணம் என்பதை மட்டுமே வைத்துக்கொண்டு அதை Sci-fi என கூறிவிட முடியாது.
காலப் பயணம் தொடர்பான ஒரு Fantacy படம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

For eg : எந்திரனில் ரோபோ எப்படி செயல் படுகிறது என்ற செயலாக்க விரிவுரையேதும் அளிக்கப்படவில்லை. ரோபோக்கள் என்பதும் அதன் செயலாக்கம் என்பதும் சாத்தியமானது என்பது நாமனைவரும் அறிந்ததேயாதலால் அது தவிர்க்கப்படுகிறது.
அதே சமயம் ரோபோக்களுக்கு மனித உணர்வுகளிப்பது சாத்தியமற்றது ஆகையால் ஹார்மோன்ஸ் எப்படி சுரக்கிறது என்பதை Reverse osmosis என ரஜினி விளக்குவார்.
இதன் அவசியத்தையே நாம் வேண்டுகிறோம்.

அந்த வகையில் இன்று நேற்று நாளையும்
24ம் எந்த வகையான திரைப்படம் என்பதை நீங்களே கிரகித்துக்கொள்ளுங்கள்.

பொதுவான காலப்பயண மேற்கதையான, மிஷினோடு தொடங்கி, தொடங்கிய இடத்திற்கே திரும்ப வந்து,
மறுபடியும் க்ளைமேக்ஸில் அதே டைம்லைனில் மிஷினின்றி கதையை தொடங்கும் வழமையான டெம்ப்ளேட்டை மட்டும் கதாசிரியர்கள் பின்பற்றும் காரணம் புரியவில்லை.
நேரத்தின் அவசியத்தை உணர்த்தவோ fixed timelineஐ ஆதரிக்கவோ அப்படி செய்திருக்கலாம்.
இரண்டுமே நம் இந்தியாவில் மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்களாயிற்றே!

மற்றபடி இவையிரண்டும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெரும் முன்னெடுப்பு முயற்சிகளாதலால்
திரைக்கதையிலோ காட்சி உருவாக்கங்களிலோ வேறெந்த குறைகளும் சொல்ல விருப்பமில்லை.
இதன் பின் இந்த காலப் பயண வகையறாக்களை கையிலெடுக்கும் இயக்குநர்களுக்கு இவை முன்மாதிரிகளாகவும்
காலப் பயண கதைகளோடு பழக்கமில்லாத பார்வையாளர்களுக்கு வழிகாட்டி (அ) எடுத்துக்காட்டாக அமையும்.

போதுமான வரை உங்களை குழப்பி விட்டதாக நம்புகிறேன்! :-)
பதிவில் ஏதும் தத்துவ தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
என்னிடமிருக்கும் Time machineலிருந்து பதிவிட்ட நாளுக்கு நேரத்திற்கு சென்று திறுத்தி எழுதிக்கொள்கிறேன்.
அய்யோ.! பின் Paradoxல் உங்களுக்கு பின்னூட்டமளிப்பதற்கான அவசியமின்றி போய் விடுமே.!? ;-)

-ராஜ்குமார்.ரா @RajiTalks